டி20 உலககோப்பை இந்த அணி தான் தட்டிச்செல்லும் ; இந்த 4 அணிகள் தான் அரையிறுதியில் விளையாடும் – ஷோகிப் அக்தர்

0
10598
Shoaib Akhtar T20 World Cup

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோகிப் அக்தர் டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார் தற்போது நடந்து முடிந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டி20 போட்டியின்போது பாகிஸ்தானின் செயல்பாடு குறித்து பேசிய அத்தர் பாகிஸ்தான் என்று டி20 போட்டிகளில் எளிதாக கருதிக்கொண்டு களத்தில் இறங்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் டாஸ் வென்று முதலில் பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தார்கள் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஹசம் 51 ரன்கள் எடுத்திருந்தார்.பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து 7 வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை முகமது ஆபீஸ் 4 ஓவர்களை வீசி 6 ரன்களை மட்டுமே வழங்கி ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணி வெற்றியை கொண்டாடும் வகையில் தனது யூடியூப் சேனலில் பேசிய அக்தர் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய இதற்காக பாகிஸ்தான் அணிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார் மேலும் நடைபெற இருக்கிற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும். இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதும் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார்.

Virat Kohli T20 World Cup

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை ஒருநாள் அணியை காட்டிலும் டி-20 இல் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் ரியாஸ் சோயிப் மாலிக் இமாத் வாசிம் ஆகிய வீரர்கள் அணிக்குத் திரும்பினார் பாகிஸ்தான் அணி வலிமையான அணியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை தலைசிறந்த ஸ்பின்னர்கள் அணியில் இருப்பதினால் எதிரணிக்கு அவர்கள் தொந்தரவு அதிகம் கொடுப்பார்கள்.ஆகையால் பாகிஸ்தான் அணிக்கு 150 ரன் என்பது போதுமானது.

அரையிறுதியில் 4 அணிகள்

பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பை வருவதை நான் பார்க்க ஆசைப்படுகிறேன். எனது கணிப்பின்படி மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதி எட்டும். இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடும்.இறுதிப் போட்டியின் முடிவில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் உலக கோப்பையை பட்டத்தை தட்டிச் செல்லும் என்று ஷோகிப் அக்தர் கூறியுள்ளார்

- Advertisement -

டி20 போட்டிகளில் பொறுத்தவரை பாகிஸ்தான் அணியை எந்த அணியும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது . பாபர் ஹசம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் . பேட்டிங் பந்துவீச்சு பீல்டிங் ஆகிய மூன்று டிபார்ட்மெண்ட் களிலு மிகவும் அற்புதமாக செயல்படுகிறது பாகிஸ்தான் அணி பலமாக உள்ளது
ஒருநாள் போட்டிகளை காட்டிலும் டி20 போட்டிகளில் எதிர் அணிகளை வீழ்த்தி சிறந்த அணியாக முன்னேறி வருகிறது.