இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு இந்த பிரச்சனை இருக்குன்னு சொன்னா ஏத்துக்க மாட்டேன்.. இந்த ஒரு ஷாட்ல எல்லாமே மாறும் – சிவம் தூபே நம்பிக்கை

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய வீரர்கள் ஆஃப் பின் பந்துவீச்சுக்கு எதிராக போராடுவது குறித்து இந்திய ஆல்ரவுண்டர் சிவம் துபே சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.

நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. இதில் மிடில் வரிசையில் களம் இறங்கிய சிவம் துபே 31 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 66 ரன்கள் குவித்தார். அவரது அதிரடி ஆட்டமே இந்திய அணி 190 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தது. அதற்குப் பின்னர் களம் இறங்கிய நெதர்லாந்து அணி 176 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

தொடக்கத்தில் இந்திய வீரர்கள் ஆஃப் பின் பந்துவீச்சுக்கு எதிராக தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து வந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் தூபே கூட்டணி இதை தடுத்து நிறுத்தி ரன்கள் உயர வழி வகுத்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி ஆப் ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறுகிறதா? என்கிற கேள்விக்கு சிவம் டுபே மருத்து சில விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இதில் ஒன்றும் கிடையாது. சில நேரங்களில் சில பேட்ஸ்மேன்கள் சில பந்துகளை அடிக்க முடியாது என்பதால் இதில் கருத்து கூற எதுவும் இல்லை. இது ஒரு ஷாட் பற்றியது. அவர்கள் அந்த ஒரு ஷாட்டை அடிக்க தொடங்குகிறார்கள் என்றால் வரவிருக்கும் போட்டிகளில் அது குறித்து எந்த பிரச்சனையும் இருக்காது.

நீங்கள் ஒரு பவுண்டரி கூட அடிக்காத போது உங்கள் மீது அழுத்தம் இருக்கும். ஆனால் 10 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தாலும் அடுத்த 5 பந்துகளில் 2 சிக்சர்கள் அடித்து சமன் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும். இதில் ஒரு பார்ட்னர்ஷிப் உருவாக்குவது மிகவும் முக்கியம். அதனால் 2 முதல் 4 பந்துகள் எடுத்தால் எந்த தவறும் கிடையாது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by