பங்களாதேஷ் டி20.. ஷிவம் துபே ரூல்டு அவுட்.. மும்பை வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. மாறிய நிலவரங்கள்

0
534
Shivam

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து ஷிவம் துபே ரூல்டு அவுட் ஆகியிருக்கிறார்.

இந்திய அணி உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நாளை குவாலியர் மைதானத்தில் இரவு நடைபெறுகிறது.

- Advertisement -

ஷிவம் துபேவை வைத்து திட்டம்

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. எனவே மிடில் ஓவர்களில் வரும் ஸ்பின்னர்களை தாக்கி விளையாடுவதற்கு ஷிவம் துபே சரியானவராக இருப்பார். மேலும் ஒன்று இரண்டு ஓவர்கள் மிதவேக பந்தும் வீச முடியும். இதன் காரணமாக அடுத்த டி20 உலகக் கோப்பை இந்திய அணி நிர்வாகத்தின் திட்டத்தில் அவர் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து மொத்தமாக ஷிவம் துபே ரூல்ட் அவுட் ஆகி இருக்கிறார். இதன் காரணமாக ஹைதராபாத் பணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி பிளேயிங் லெவனில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

மும்பை வீரருக்கு அதிர்ஷ்டம்

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிடில் ஆர்டரில் விளையாடும் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக உருவாகி வரும் திலக் வர்மா ஷிவம் துபே இடத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறார். சில மாதங்களாக காயத்தின் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :

இந்திய அணிக்கு ஒரு பகுதி நேர ஆப் ஸ்பின் பேட்டிங் ஆல் ரவுண்டர் தேவைப்பட்டது. இந்த இடத்திற்கு முதலில் திலக் வர்மா பரிசோதிக்கப்பட்டார். ஆனால் அவர் காயமடைந்து வெளியேறியதும், மேலும் ஆப் ஸ்பின் பேட்டிங் ஆல் ரவுண்டர் ரியான் பராக் ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டதும் வாய்ப்பை அவருக்கு மாற்றிவிட்டது. இப்படியான நிலையில் விரும்பத்தகாத அதிர்ஷ்டவசத்தின் மூலமாக மீண்டும் திலக் வர்மா இந்திய டி20 அணிக்கு வந்திருக்கிறார்.

- Advertisement -