கிரிக்கெட்

“141 கி.மீ வேகத்தில் வந்த பந்தை ஸ்கூப் ஷாட் அடித்த ஹெட்மெயர்”- இது ஹெட்மெயரின் பீஸ்ட் மோட்

மேற்கு இந்தியதீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது . முதல் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை மேற்கு இந்திய தீவு அணி வீழ்த்தியது. இதன் இரண்டாம் போட்டி இன்று ( ஜூலை 11) நடைப்பெற்றது இதில் மேற்கு இந்திய தீவு அணியின் நட்சத்திர வீரர் சிம்ரோன் ஹெட்மயர் தனது அதிரடியை காட்டினார் அவரது அதிரடியில் ஆஸ்திரேலிய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

- Advertisement -


பொறுமையாக ஆரம்பித்த ஹெட்மேயரின் ஆட்டம் போக போக விஸ்வருபமாக மாறியது . 13வது ஓவர்இல் அதிரடியாயியா ஆரம்பித்த இவர் ஆஸ்திரேலியா வீரர்கள் ஆஸ்டன் ஓவரில் தந்து சிக்சர் கணக்கை துவங்கிய ஹெட்மெயர் அடுத்து அடுத்து ஓவர்களில் மிட்சல் மார்ஷ் , ஆடம் ஜாம்பா ஓவர்களில் சிக்சர் அடித்து தனது வலிமையை காட்டினார் .

இப்போட்டியில் 17வது ஓவரை வீசுவதற்காக மிட்சல் ஸ்டார்க் தயாராக மறுமுனையில் அரைசதத்தை கடக்க காத்திருந்தார் சிம்ரோன் ஹெட்மயர். முதல் இரண்டு பந்துகளிலும் ரன் எடுக்காதவைகையில் வீசினார் ஸ்டார்க். அப்போது தான் தளபதி விஜய் போன்று தனது பீஸ்ட் மோடை ஆக்டிவேட் செய்தார் சிம்ரோன் ஹெட்மயர் . மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ஹெட்மயர் 141 கி.மீ வேகத்தில் மிட்சல் ஸ்டார்க் வீசிய பந்தை கீழே குனிந்து ஸ்கூப் ஷாட் அடிக்க பந்து கீப்பர் மேத்யுவ் வேட் தலைக்கு மேலே மின்னல் வேகத்தில் சிக்சருக்கு பறந்தது. சிக்சரை அடித்து தனது கெத்தான அரை சதத்தை பூர்த்தி செய்தார் ஹெட்மெயர். அடுத்த ஓவரை வீசுவதற்காக வந்த ஹாசல்வுட் ஊவரையும் விட்டுவைக்கவில்லை அவரது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை மிரட்டினார்.

இந்த போட்டி தான் அவரது வாழ்நாள் சிறப்புமிக்க ஆட்டமாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஹ்கேட்மேயரின் அதிரடி ஆட்டத்தினால் 196 ரன்களை குவித்தது இப்போட்டியில் அவர் 61(36) ரன்கள் விளாசினார் . இறுதியில் மேற்கு இந்திய தீவு அணி இடம் ஆஸ்திரேலிய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

தற்போது 141 கி.மீ வேக பந்தை ஹெட்மெயர் அடித்த ஸ்கூப் ஷாட் வீடியோ சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது . ரசிகர்கள் பலரும் சிம்ரோன் ஹெட்மயரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -