ஐபிஎல் 2024

இதெல்லாம் தோல்வியே இல்ல.. மீண்டு வருவோம்.. என் முடிவு ரொம்ப சரியானது – பாட் கம்மின்ஸ் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து சிஎஸ்கே அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் தங்கள் பலமான பேட்டிங்கை பயன்படுத்தி வெல்வதற்காக, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் கடந்த போட்டியில் சேஸ் செய்து சொந்த மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற கம்மின்ஸ் முதலில் பனிப்பொழிவை முன்னிட்டு பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் மிகவும் பொறுப்பாக விளையாடி 54 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார். இவருடன் இணைந்து விளையாடிய டேரில் மிட்சல் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடியின் சிறப்பான பேட்டிங் காரணமாக சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பம் முதலில் அதிர்ச்சியாக அமைந்திருந்தது. அந்த அணிக்கு மார்க்ரம் மட்டுமே 26 பந்தில் 32 ரன்கள் எடுத்து கொடுத்தார். அதிரடி வீரர் கிளாசன் 21 பந்தில் 20 ரன்கள் மட்டும்தான் எடுக்க முடிந்தது. முடிவில் அந்த அணி 18.5 ஓவரில் 134 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆகி, 78 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து தோல்விக்கு பின் பேசிய ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் “டாஸ் வென்றதில் நான் பின்னோக்கி சென்றால் முதலில் பேட்டிங் செய்வேனா? என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. பந்துவீச்சை நாங்கள் தேர்ந்தெடுத்தது மிகவும் சரியான முடிவு. வெற்றி பெற இதுவே சிறந்த வாய்ப்பு என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். ஆனால் சிஎஸ்கே அணி 210 ரன்கள் எடுப்பதற்கு பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினார்கள்.

இதையும் படிங்க : ஹைதராபாத்தை மடக்கிய துஷார்.. சிஎஸ்கே புள்ளி பட்டியலில் தாறுமாறு ஏற்றம்.. ஒரே வெற்றியில் மாறிய நிலவரம்

இலக்கை துரத்தி வெல்ல எங்களிடம் சிறப்பான பேட்டிங் வரிசை இருந்தது. நாங்களும் வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தோம். எங்களுடைய பேட்டிங் வரிசை எப்படி செயல்படுகிறது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இதே பேட்டிங் வரிசைதான் எங்களுக்கு முன்பு பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தது. ஆனால் இன்றைய நாள் எங்களுடையதாக இல்லை. இது ஒரு பெரிய தோல்வி கிடையாது, நாங்கள் மீண்டு வருவோம்” என்று கூறியிருக்கிறார்.

Published by