“இதை தான் என்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டாங்க” – இலங்கை அணி குறித்து தவான் நெகிழ்ச்சி

0
2802
Shikhar Dhawan Sri Lanka

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 நேற்று நடைபெற்றது டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது தொடக்கத்திலேயே இந்திய அணி வீரர்கள் தங்களது விக்கெட்களை வரிசையாக இழக்க இந்திய அணி பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பவர் ப்ளேயிலேயே களமிறங்க வேண்டிய சூழ்நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் உண்டாக்கினார்கள்.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் ஹசரங்கா மிரட்டலாக பந்துவீச்சு வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்க்கு 81 ரன்கள் எடுத்தது . இந்திய அணியில் அதிகபட்சமாக பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 23 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார். பின்னர் 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 83 ரன்கள் எடுத்து இப்போட்டியில் வெற்றிப்பெற்றுது. இப்போட்டியில் வென்றதன் மூலம் இலங்கை அணி டி-20 தொடரை கைப்பற்றியது. இந்திய அணி அதிகபட்சமாக ராகுல் சஹர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -
India Tour of Sri lanka

தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் எனது விக்கெட் துவக்கத்திலேயே விழுந்ததால் இளம் வீரர்கள் சற்று பதட்டமாகிவிட்டார்கள். சில முன்னணி வீரர்கள் விளையாட முடியாத சூழ்நிலை இளம் வீரர்களுக்கு அழுத்தத்தை அதிகப்படுத்தி உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை அனைத்து வீரர்களும் அற்புதமாக செயல்பட்டனர் கடந்த இரண்டு ஆட்டங்களிலும் . இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஜொலிக்கவில்லை அதற்கு துவக்கத்தில் எனது விக்கெட் விழுந்ததே காரணம். பிறகு களமிறங்கிய இளம் வீரர்கள் சற்று பதட்டம் அடைந்து விட்டார்கள்.போட்டி முடிவு இலங்கைக்கு சாதகமாக இருந்தாலும் இரண்டு அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

இலங்கை அணி குறித்து தவான் நெகிழ்ச்சி

போட்டி முடிந்த பின்னர் இலங்கை அணி வீரர்கள் எனது அனுபவங்களை பற்றி கேட்க அழைத்தார்கள். என் வாழ்க்கையில் கிடைத்த சில அனுபவங்களை அவரிடம் பகிர்ந்து நிச்சயமாக அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் கேட்டார்கள் என்று நினைக்கிறேன். டி20 தொடரை வென்ற இலங்கை அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்று இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் கூறினார்.

இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஹசரங்கா ஆட்டநாயகன் விருது மட்டுமல்லாமல் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இலங்கை அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.டி20 தொடரை பொறுத்த வரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

- Advertisement -