கிரிக்கெட்

தனது முதலாவது டாஸை வென்ற தவான் – கப்பர் ஸ்டைலில் கொண்டாட்டம்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் பல மாற்றங்கள் இரண்டு அணியிலும் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியில் பொருத்தவரை சஞ்சு சாம்சன் , சேட்டன் சக்காரியா , கிருஷ்ணப்பா கெளதம் , நித்திஸ் ரானா , ராகுல் சஹர் என 5 புதுமுகங்களும் , நவ்தீப் சைனி என 6 மாற்றங்களுடம் களம் காணுகிறார்கள் . கடந்த ஆட்டத்தின் ஆட்டநாயகன் தீபக் சஹருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன் இந்திய அணியின் துணை கேப்டன் புவனேஷ்வர் குமாரே அணியில் இல்லை .

- Advertisement -

டிராவிட்டை பொறுத்த வரை அவருடன் சுற்றுப் பயணத்திற்கு வரும் வீரர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே இருப்பினும் தேவதூத் படிக்கள் மற்றும் ருத்ராஜ் இருவரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றதன் காரணமாக கடைசி போட்டியில் 5 புதுமுக வீரர்களை களமிறக்க இருக்கிறார்கள் .

தனது முதாலவது டாஸை வென்ற தவான்

கடைசியாக இதே நாளில் 1989 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்க்கு எதிரான மூன்றவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் ஐந்து அறிமுக வீரர்கள் களமிறங்கினார்கள். கிட்டதட்ட 31 வருடங்களுக்கு பிறகு இந்த பெரிய ரிஸ்க்கை ராகுல் டிராவிட் கையில் எடுத்துள்ளார் . இலங்கை அணியை பொறுத்த வரை பிரவீன் ஜெயவிக்ரமா , அகிலா தனஜெயா , ரமேஷ் மெண்டீஸ் என மூன்று மாற்றாங்களுடன் களமிறங்குகிறார்கள்.

இத்தொடரின் மூலம் சர்வதேச அணிக்கு கேப்டனான தவன் முதல் இரண்டு போட்டியை வெற்றி பெற வைத்து தொடரை வென்றிருந்தாலும் இரண்டு முறையும் டாஸில் தோல்வியடைந்தார் இதனையடுத்து டாஸ் போடுவதற்காக மைதானத்திற்க்கு இரண்டு அணியின் கேப்டன்களும் சென்றனர் .டாஸ் இந்தியா பக்கம் விழுந்தது . 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . இப்போட்டியில் டாஸை வென்றதன் மூலம் ஷிகர் தவன் தனது முதலாவது டாஸை வெற்றி பெற்றிருக்கிறார். தனது மகிழ்ச்சியை வெளிக்கொண்டு வரும் வகையில் தனது ஸ்டைலான கப்பர் ஸ்டைலில் தொடையை தட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர் . இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

- Advertisement -