“எனக்கான நேரம் இது இல்லை என்று நான் நினைக்கிறேன்” – ஷிகர் தவான் வெளிப்படையான பேச்சு!

0
211
Shikar dhawan

இந்திய கிரிக்கெட்டில் நல்ல திறமை இருந்தும் கண்டுகொள்ளப்படாத புலப்படாத ஒரு வீரர் என்றால் அது ஷிகர் தவான் தான். உலக கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் ஷிகர் தவான் அளவிற்கு ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருக்கும் வீரரை விலக்கி வைத்து பார்த்து இருக்க முடியாது!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஷிகர் தவானை விலக்கி வைக்கும் பொழுது அவரது ரன் சராசரி 40! டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு துவக்க ஆட்டக்காரர் சராசரி 40 என்பது இந்த காலகட்டத்தில் மிகவும் பெரியது. இப்படி இருந்தும் ஷிகர் தவான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்!

- Advertisement -

இதேபோல் டி 20 கிரிக்கெட்டிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவது என்ற முடிவில் ஓரங்கட்டப்பட்டார். ஆனால் ஐபிஎல் தொடரில் ஷிகர் தவானின் செயல்பாடுகளைப் பார்த்தால் அவரை அணியில் இருந்து விலக்கி வைத்து அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது!

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இருந்து இந்த ஆண்டு 2022 வரை 300 பிளஸ் ரன்களுக்கு மேல் மூன்று முறை 400 பிளஸ் ரன்களுக்கு மேல் மூன்று முறை 500 பிளஸ் ரன்களுக்கு மேல் மூன்று முறை 600 பிளஸ் ரன்களுக்கு மேல் ஒரு முறை என 13 வருடங்கள் ஐபிஎல் தொடரில் மிகப் பிரமாதமாக விளையாடியிருக்கிறார்

ஐபிஎல் தொடரில் கடந்த நான்கு வருடங்களில் மட்டுமே எடுத்துக்கொண்டால் அதில் இரண்டு 400 ரன்கள் ஒரு 500 ரன்கள் ஒரு ஆறு நூறு ரன்கள் என்ன அவரது ரன் சராசரி மிக மிக பிரமிப்பாய் இருக்கிறது. இப்படி எல்லாம் இருந்தும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின்பு சவுத்ஆப்பிரிக்கா அணியோடு நடந்த 20 20 தொடரில் இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவது என்ற முடிவில் ஷிகர் தவான் ஓரங்கட்டப்பட்டார்!

- Advertisement -

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷிகர் தவன் ” உண்மையை சொல்வதென்றால் நான் எந்த ஏமாற்றத்தையும் உணரவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒருவேளை இது என்னுடைய நேரம் இல்லை போல. அதனால்தான் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லையே என்னமோ. களத்தில் நான் அர்ப்பணிப்பு உணர்வோடு மகிழ்ச்சியாக விரும்பி அனுபவித்து விளையாடினேன். அதுதான் முக்கியம். அணியில் என் பெயர் வரவில்லை என்றால் நான் கவலைப்படுகிறேன் அதனால் பாதிப்படைந்த என்பதெல்லாம் கிடையவே கிடையாது. நான் நல்ல ஒரு இடத்தில் இருக்கிறேன். அதில் என்னால் முடிந்த சிறப்பானதே செய்வேன்” என்று கூறினார் !

மேலும் பேசிய ஷிகர் தவான் “எதுவும் முடிந்து போகவில்லை எனக்கு வாய்ப்புகள் இல்லாமல் இல்லை நான் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் என்னால் மீண்டும் இந்திய 20 20 அணியில் தேர்வாக முடியும். சிறப்பாக விளையாடும் போது மட்டும் தான் என் கையில் இருக்கிறது தேர்வு என் கையில் இல்லை தேர்வு என்பது தேர்வாளர்களின் சிந்தனை தேவையைப் பொறுத்தது” என்று கூறினார் !