மீண்டும் சாஹலை ஒதுக்கியது பிசிசிஐ, அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக அதிரடி ஆல்ரவுண்டர் வருகை ; வெளியானது உலக கோப்பை டி20 தொடருக்கான புது இந்திய அணி

0
183
Axar Patel and Chahal

இன்று இந்திய ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட்களை பிசிசிஐ கொடுத்து வருகிறது. காலையில் உலக கோப்பை டி20 தொடரருக்கான புதிய ஜெர்சியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன் பின்னர் தற்போது சில நிமிடங்களுக்கு முன் உலக கோப்பை டி20 தொடருக்கான புதிய இந்திய அணி வீரர்கள் பட்டியலையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

ஒரே ஒரு மாற்றத்துடன் வெளியான புதிய அணி பட்டியல்

கடந்த மாதம் பிசிசிஐ உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், ஐசிசியின் விதிமுறைப்படி இந்த வாரத்துக்குள் அந்த மாற்றத்தை ஒவ்வொரு அணியும் செய்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் இந்திய அணி ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் தற்பொழுது செய்துள்ளது.

- Advertisement -

இந்திய அணியில் இடம் பெற்று இருந்த அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக ஸ்டான்ட் பை வீரர் ஷர்துல் தாகூர் அணியில் இடம் பெற்றிருக்கிறார். தாகூர் இந்திய அணியில் உள்நுழைந்ததால் தற்போது அக்ஷர் பட்டேல் ஸ்டான்ட் பை வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வருட ஐபிஎல் தொடரில் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள தாகூர் மிக அற்புதமாக பந்து வீசி 13 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றி இருக்கிறார். அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் அவர் நல்ல டச்சில் இருந்து வரும் காரணத்தினால் அவரது பெயர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நெட் பவுலராக உம்ரன் அக்மல், வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களும் தேர்ந்டுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

உலக கோப்பை டி20 தொடருக்கான புதிய ஜெர்சியை வெளியிட்ட பிசிசிஐ

இன்று காலை உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ வெளியிட்டது. எம் பி எல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்த பிசிசிஐ, புதிய ஜெர்சியை உலக கோப்பை டி20 தொடருக்காக தேர்ந்தெடுத்துள்ளது. கரு ஊதா நிறத்தில் சற்று சிம்பிளாக ஜெர்சி உள்ளது என்று இந்திய ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விமரிசனம் அளித்து வருகின்றனர்.

- Advertisement -

இதற்கு முன் இந்திய வீரர்கள் ரெட்ரோ ஜெர்சியில் விளையாடி வந்து கொண்டிருந்த நிலையில், உலகக் கோப்பை டி20 தொடரில் இந்த புதிய ஜெர்சியை இந்திய அணி வீரர்கள் அணிந்து விளையாட போகின்றனர். ஒரு சில இந்திய ரசிகர்கள் ஜெர்சி அற்புதமாக இருக்கிறது என்று கூறி வரும் நிலையில், ஒரு சில ரசிகர்கள் இன்னும் சிறப்பாக ஜெர்சியை வடிவமைத்து இருந்திருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை கூறிவருகின்றனர்.

உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் புதிய வீரர்கள் பட்டியல் :

விராட் கோலி (C), ரோஹித் ஷர்மா (VC), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(WK), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் சஹர், ஷர்துல் தாகூர், வருன் சக்கரவர்த்தி, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் முகமது ஷமி

- Advertisement -

ஸ்டாண்ட் பை வீரர்கள் : ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹர் மற்றும் அக்ஷர் பட்டேல்

நெட் வீரர்கள் : ஆவேஷ் கான், உம்ரன் மாலிக், ஹர்ஷால் பட்டேல், லுக்மான் மெரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கரண் ஷர்மா, சபாஷ் அஹமத் மற்றும் கிருஷ்ணப்ப கௌதம்