அனைத்து முன்னணி பந்து வீச்சாளர்களையும் பின்னுக்குத் தள்ளி தென்னாபிரிக்கா மண்ணில் ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை

0
1317
Shardul Thakur 7 Wicket Haul

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் மட்டுமே குவித்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 50 ரன்கள் விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் 46 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க அணி அதனுடைய முதல் இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்து ஆட்டமிழந்துள்ளது தென்னாபிரிக்க அணி வீரர்களில் அதிகபட்சமாக கீகன் பெட்டர்சன் 62 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பவுமா 51 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஷர்துல் தாகூர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவுட்டான தென்னாபிரிக்க அணி

36 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 74 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்து சிறப்பான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் ஷர்துல் தாகூரின் சிறப்பான பந்துவீச்சை கட்டுப்படுத்த முடியாமல் தென்னாபிரிக்க அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

தாகூர் இன்று கைப்பற்றிய விக்கெட்டுகள் அனைத்துமே அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆவார்கள். அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர், கீகன் பெட்டர்சன், வேன் டெர் டஸ்சென், பவுமா மற்றும் வெரெய்யன் விக்கெட்டுகளை இன்று அவரி கைப்பற்றியுள்ளார். 68 பந்துகளில் ( 11.2 ஓவர்களிலேயே )அவர் 5 விக்கெட்டுகளை ( ஃபைவ் விக்கெட் ஹால் ) கைப்பற்றி அனைத்து இந்திய ரசிகர்களையும் பெருமை அடைய செய்துள்ளார்.

போட்டி நடைபெறும் ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் மத்தியில் முதல் முதலில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை ( ஃபைவ் விக்கெட் ஹால் ) கைப்பற்றியவர் அனில் கும்ப்ளே ஆவார். பின்னர் இந்த மைதானத்தில் ஜவகல் ஸ்ரீநாத், ஸ்ரீசாந்த், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் மட்டுமே ஃபைவ் விக்கெட் ஹால் கைப்பற்றி இருந்தனர். ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் இன்று ஃபைவ் விக்கெட் ஹால் எடுத்ததன் மூலமாக, மேற்கூறிய வீரர்கள் பட்டியலில் 6வது பந்து வீச்சாளராக ஷர்துல் தாகூர் தற்பொழுது இணைந்துள்ளார்.

- Advertisement -

மார்க்கோ ஜென்சன் மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளையும் இறுதி நேரத்தில் கைப்பற்றி, போட்டியின் முடிவில் 17.5 ஓவர்கள் வீசி 61 ரன்கள் மட்டுமே கொடுத்து மொத்தமாக 7 விக்கெட்டுகளை ஷர்துல் தாகூர் கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலமாக ஆசிய வீரர்கள் மத்தியிலேயே தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு இன்னிங்சில் சிறந்த பவுலிங் (7-61) ரெக்கார்டு வைத்த பவுலராக புதிய சாதனையை என்று அவர் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த போட்டிக்கு முன் எனக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் (7-65) சிறந்த பவுலிங் ரெக்கார்டு வைத்திருந்தார். ஆனால் தற்பொழுது அந்த சாதனையும் தாகூருக்கு (7-61) சொந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி அதனுடைய இரண்டாவது இன்னிங்சில் தற்போது 13 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் குவித்து, தென்ஆப்ரிக்க அணியை விட 21 ரன்கள் முன்னிலையில் உள்ளது.