ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் தன்னை தேர்வு செய்யாதது குறித்து இந்திய அணி நிர்வாகத்தில் இருந்து தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என சர்துல் தாக்கூர் கூறியிருக்கிறார்.
கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் சர்துல் தாக்கூர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்திய ஆல் ரவுண்டராக இருந்தார். தற்போது அவருடைய இடத்திற்கு நிதிஷ்குமார் ரெட்டியை புதியவராக இருந்தாலும் அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு அனுபவ ஆல் ரவுண்டர் சர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்படாமல் அறிமுக வீரராக இருக்கும் அனுபவமில்லாத நிதீஷ் குமார் ரெட்டியை தேர்வு செய்தது ஏன் என்பது பற்றி கம்பீர் கூறும் பொழுது “இவருடைய தேர்வு என்பது நாம் முன்னேறி செல்வதை பற்றியது” என்று கூறியிருந்தார்.
மேலும் சர்துல் தாக்கூர் காயத்தின் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார். பின்பு ரஞ்சி டிராபிக்கு கடந்த வருடம் திரும்பி பந்து வீச்சில் கொஞ்சம் தடுமாற்றத்துடன் இருந்தார். ஆனால் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு மும்பை அணியை முக்கிய போட்டியில் காப்பாற்றிக் கொண்டு வந்து சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சர்துல் தாக்கூர் கூறும் பொழுது “என்னிடம் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திரும்பி வந்து விட்டேன். நான் தற்போது இந்திய அணியில் கிடையாது என்பது வெளிப்படையானது”
“இருந்த போதிலும் அறுவை சிகிச்சைக்கு பின் நான் தற்சமயம் நல்ல முறையில் என்னை உணர்கிறேன். கடந்த சில மாதத்தில் சிறப்பான முறையில் நல்ல ரிதத்தில் பந்து வீசி வருகிறேன். என் உடல் தகுதி மேம்பட்டு இருக்கிறது. அது என்னுடைய பந்துவீச்சில் எதிரொலிக்கிறது”
இதையும் படிங்க : ஆஸி முதல் டெஸ்ட்.. ரவி சாஸ்திரியின் இந்திய பிளேயிங் XI.. அஸ்வினுக்கு இடமில்லை.. 8 வரை பேட்டிங் நீளம்
“ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மிகவும் நீண்டது. எனவே எனக்கு எப்போது வேண்டுமானாலும் அங்கிருந்து வாய்ப்புகள் வரலாம். மேலும் அடுத்து இங்கிலாந்து வெள்ளைப்பந்து தொடர் விளையாட இங்கே வருகிறது. அதற்கு அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் இருக்கிறது. இப்படி நிறைய கிரிக்கெட் இருப்பதால் எனக்கு ஏதாவது வாய்ப்புகள் கிடைக்கும்”என்று கூறியிருக்கிறார்.