கடந்த ஒரு வருடமாக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் தாக்கூர் கலக்கல் – முக்கியமான நேரத்தில் அணியை மீட்டெடுப்பு

0
128
Shardul Thakur Allround Performance

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியுடன் தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் டீகாக் ஓய்வு பெற்றார். தற்போது 2-வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும். இதுவரை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி அதன் சொந்த மண்ணில் கைப்பற்றியது இல்லை என்ற மோசமான வரலாற்றை மாற்ற இம்முறை இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ராகுல் அரை சதம் அடித்தாலும் மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடாத காரணத்தினால் குறைவான ஸ்கோரை இந்திய அணி பெற்றது. பின்பு விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த போது பந்துவீச வந்த இந்திய வீரர் ஷர்துல் தாகூர் அற்புதமாக விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரே இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் தாகூர்.

- Advertisement -

மேலும் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி திணறி கொண்டிருந்தபோது பேட்டிங்கில் அசத்தினார் தாகூர் 24 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடக்கம். இதேபோல இதற்கு முன்பு இந்திய அணி வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான காபா டெஸ்ட் போட்டியில் இவர் சிறப்பாக விளையாடி 67 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகளையும் எடுத்தார் தாகூர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 57 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 60 ரன்களும் எடுத்து கொடுத்து இந்திய அணிக்கு உதவினார். அதுவும் போக இந்த ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளையும் எடுத்தார். இப்படி முக்கியமான நேரங்களிலெல்லாம் சிறப்பாக பேட்டிங் பிடித்து இந்திய அணியை இக்கட்டில் இருந்து காப்பாற்றி வருகிறார்கள் தாகூர். தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் இன் போது பந்து வீச்சிலும் இவர் சிறப்பாக ஆடினால் இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் தன்னுடைய முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்யும்.