டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்த இரண்டு அணிகளுக்கு தான் அதிக வாய்ப்பு – ஷேன் வார்ன் கருத்து

0
153
Shane Warne about T20WC

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் முதல் சுற்று தற்போது நடந்து வருகிறது. கிட்டத்தட்ட முதல் சுற்று முடிவடைந்த நிலையில் அதிலிருந்து நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு தற்போது தகுதி பெற்று விட்டன. வரும் சனிக்கிழமை முதல் சூப்பர் 12 சுற்று தொடங்க உள்ளது. டி20 போட்டிகளின் சிறந்த அணிகள் மோத இருப்பதால் இந்த சுற்றை காண இப்போதே ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர். மேலும் இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாட கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது என்பது இப்போது பேசு பொருளாக உள்ளது. பல்வேறு வீரர்கள் இந்த தொடரில் கோப்பை வெல்லப்போவது யார் என்று கணித்து வரும் நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே தனது கணிப்பை வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இந்த கோப்பையை வெல்ல இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். இந்திய அணி மிகவும் சிறப்பான நிலையில் உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வண்ணமாக ஆடிய இரண்டு பயிற்சி போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணி முதல் பயிற்சிப் போட்டியில் இந்திய அணியுடன் தோல்வியுற்றாலும் அடுத்த பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

- Advertisement -

மேலும் வார்னே கூறும்போது ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருப்பதால் ஆஸ்திரேலிய அணியும் கோப்பை வெல்லும் போட்டியில் இருக்கிறது என்று கூறியுள்ளார். நியூசிலாந்து பற்றி பேசும்பொழுது இது போன்ற தொடர்களில் நியூசிலாந்து அணி எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். அதுவும்போக பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து சில அதிர்ச்சி தோல்விகளை மற்ற அணிகளுக்கு பரிசாக கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் டேவிட் வார்னர் மற்றும் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் இருவரும் மோசமான பார்மில் இருந்தாலும் டி20 உலக கோப்பையில் அவர்கள் ஆட்டம் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த இருவரில் ஒருவர் தொடர் நாயகன் விருது என்றாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றும் வார்னே கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியை மேற்கிந்திய தீவுகள் அணியுடனும் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடனும் ஆட காத்திருக்கின்றன.

- Advertisement -