வீடியோ: முகம்மது சமியின் அசுரவேக பந்து வீச்சில் சிக்கி சின்னாபின்னமான டெல்லி அணி!

0
360

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசனில் நாற்பத்தி நான்காவது போட்டி இன்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் வைத்து நடைபெற்று வருகிறது . இந்தப் போட்டியில் புள்ளிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணியும் மோதுகின்றன .

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார் . இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய டெல்லி அணியின் விக்கெட்கள் மல மல என சரிந்தன .

- Advertisement -

பவர் பிளே முடிவதற்கு முன்பாகவே அந்த அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டது . அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான வார்னர்,ரூஷோ,மனிஷ் பாண்டே பில் சால்ட் ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர் .

குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளரான முகம்மது சமி மிகச் சிறப்பாக பந்து வீசி மூன்று ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரது பந்துவீச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர் .

ஏற்கனவே பத்தாவது இடத்தில் இருக்கும் டெல்லி இந்தப் போட்டியிலும் மிகவும் கவலைக்கிடமான வகையில் ஆடி வருகிறது . தற்போது 12 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் 58 ரன்களுக்கு 5 விக்கெட் களை இழந்து விளையாடிக் கொண்டிருக்கிறது . அக்சர் பட்டேல் மற்றும் ஹக்கீம் கான் ஆகியோர் அணியை மீட்க போராடி வருகின்றனர் .

- Advertisement -

முகமது சமீ வீழ்த்திய நான்கு விக்கெட்டுகளின் வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது . குஜராத் ஆடுகளங்களில் துவக்கத்தில் கிடைக்கும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான உதவியை மிகச் சரியாகப் பயன்படுத்தி சீம் பவுலிங் மூலம் டெல்லி அணியை ஆட்டம் காண வைத்தார் முகமது சமி