என்னைப் பொறுத்தவரை சிறந்த ஐபிஎல் அணி இதுதான் – கெயில், டிவில்லியர்ஸ் இல்லாமல் ஷகிப் அல் ஹசன் வெளியிட்ட அணி

0
1379
Shakib Al Hassan

ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது கொரோனா காரணமாக அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே அத்தனை நடிகைகளும் இந்த போட்டிகளுக்கான பயிற்சிகளை தொடங்கிவிட்டனர். சில வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு பதில் மாற்று வீரர்களும் அணியில் இணைய தொடங்கிவிட்டனர். குட்டி உலக கோப்பை தொடருக்கு பயிற்சியாக இந்த ஐபிஎல் தொடர் இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை சுமார் 13 ஐபிஎல் தொடர்கள் நடந்துள்ளன. அதில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து சிறந்த ஐபிஎல் அணி என்ற ஒன்றை வெளியிட்டுள்ளார் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன். ஐபிஎல் தொடரின் ஜாம்பவான்களாக பார்க்கப்படும் இரண்டு முக்கிய வீரர்களான கெயில் மற்றும் டிவிலியர்ஸ் இவரது அணியில் இடம்பெறவில்லை.

- Advertisement -

துவக்க வீரராக மும்பை அணியில் ரோகித் மற்றும் சன் ரைசர்ஸ் அணியின் வார்னரை தேர்வு செய்துள்ளார் ஷகிப். மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு கோலி, ரெய்னா, ராகுல் ஆகிய வீரர்களை தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் பதவிக்கு சென்னை அணியின் கேப்டனாக தோனி அவர்களை தேர்வு செய்துள்ளார் ஷகிப் அல் ஹசன்.

ஆல்ரவுண்டராக ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா என இதுவரை தேர்வு செய்துள்ளார் ஷகிப். இவர் வெளியிட்டுள்ள அணியில் தனியாக ஸ்பின்னர்கள் என்று யாரும் கிடையாது. அதை ஈடு செய்யும் விதமாக மூன்று சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளார். பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் மலிங்கா என மூன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இவரது அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த 2 வீரர்கள், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர், அதிவேகத்தில் அரை சதம் அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகளைப் படைத்த வீரர்களை தனது அணியில் சேர்த்துள்ளார் ஷகிப்.

- Advertisement -

ஷகிப் அல் ஹசன் அணி – ரோகித், வார்னர், கோலி, ரெய்னா, ராகுல் தோனி, ஸ்டோக்ஸ், ஜடேஜா, பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் மலிங்கா.