நேபாளத்திடமிருந்து சதம் அடித்து வெஸ்ட் இண்டீஸை காப்பாற்றிய ஷாய் ஹோப் நிக்கோலஸ் பூரன்!

0
842
Wi

தற்பொழுது இந்த வருடத்திற்கான ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாபேவில் நடந்து வருகிறது.

இந்தத் தகுதிச்சுற்று போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே உலகக்கோப்பையில் விளையாடும்.

- Advertisement -

இதில் சர்வதேச அளவில் பிரபலமான இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் விளையாடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அணிகளான ஸ்காட்லாந்து, அயர்லாந்து மாதிரியான அணிகளும் இருக்கின்றன.

கடந்த முறை டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நெதர்லாந்து அணியிடம் தோற்று உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தது.

இந்தநிலையில் இன்று நேபாள அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் தோற்று முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 9 ரன்களுக்கு இரண்டு விக்கட்டுகள் விழுந்து விட்டது. அடுத்து மூன்றாவது விக்கெட் 55 ரன்னுக்கு போய்விட்டது.

- Advertisement -

இப்படி நெருக்கடியான நேரத்தில் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் இணைந்து மிக அபாரமாக விளையாடி சதம் அடித்து வெஸ்ட்இண்டீஸ் அணியை மீட்டு கொண்டு வந்திருக்கிறார்கள்.

கேப்டன் ஷாய் ஹோப் 129 பந்தில் 10 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 132 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 94 பந்தில் 10 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 124 ரன்கள் எடுத்தார்கள். 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கட்டுகள் இழப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் 339 ரன்கள் சேர்த்தது.

தற்பொழுது பெரிய இலக்கை நோக்கி விளையாடி வரும் நேபாள அணி 15 ஓவர்களுக்கு 59 ரன்கள் எடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.