“இந்தியா இங்கிலாந்து போட்டியில் இந்த அணிதான் வெல்ல 65% வாய்ப்பு” ஷாகித் அப்ரிடி கணிப்பு!

0
83927
Ind vs Eng

எட்டாவது உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நாளை முதல் அரை இறுதி போட்டியில் சிட்னி மைதானத்தில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது!

இதற்கு அடுத்து இரண்டாவது அரையிறுதி போட்டியில் இரண்டு பலம் வாய்ந்த அணிகளான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அடிலைடு மைதானத்தில் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன!

- Advertisement -

மிகப்பெரிய வணிகமும் ரசிகர் கூட்டத்தையும் வைத்திருக்கிற இந்திய அணி அரை இறுதியில் மோதவிருக்கும் ஆட்டத்திற்கு உலகம் தழுவி பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது!

பல நாடுகளைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டி குறித்து தங்களது கருத்துகளையும் கணிப்புகளையும் தெரிவித்து வருகிறார்கள்!

இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல முன்னாள் வீரருமான சாகித் அப்ரிடி தனது கருத்தையும் கணிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்!

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
” இரு அணிகளும் மிகவும் சமமான நிலையில் இருக்கின்றன. இந்த உலகக் கோப்பை தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டன. மேலும் கடந்த காலங்களிலும் டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றன. ஆனால் எனது கணிப்பு என்னவென்றால் இங்கிலாந்தை விட இந்திய அணியை 60 முதல் 65 சதவீதம் நான் மேலே வைத்திருப்பேன் ” என்று கூறி இருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” முதலில் தேர்ந்தெடுப்பது பேட்டிங் அல்லது பௌலிங் என்று எதுவாக இருந்தாலும் அணியின் கலவையில் சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தால் அது இந்திய அணிக்கு சாதகமாக அமையும். இருப்பினும் இது ஒரு பெரிய போட்டி எனவே அன்றைய நாளில் குறைவான தவறுகளை எந்த அணி செய்கிறதோ அந்த அணியே வெல்லும் ” என்று முடித்திருக்கிறார்!

- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் இரண்டு ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தோல்வியைத் தழுவி முதல் சுற்றோடு வெளியாகி இருந்தது இந்திய கிரிக்கெட் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ரோகித் சர்மா தலைமையில் ராகுல் டிராவிட் பயிற்சியில் இந்திய அணி இந்த டி20 உலகக் கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேறி கொஞ்சம் ஆசுவாசப்பட்டு இருக்கிறது தனது ரசிகர்களையும் ஆசுவாசப்படுத்தி இருக்கிறது!