தற்போது பாகிஸ்தான் ஒருநாள் அணிக்கு ஷாகின் அப்ரிடி புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு அவருடைய மாமா ஷாகித் அப்ரிடி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
தற்போது பங்களாதேஷுக்கு சென்று அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இரண்டுக்கு ஒன்று என பாகிஸ்தான் அணி ஷாகின் அப்ரிடி தலைமையில் தோற்று இருக்கிறது. மேலும் இந்த தொடருக்கு பாபர் அசாமை தேர்வு செய்யாமல் விட்டது ஏன் என புரியவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒவ்வொரு தொடரும் தோல்விக்கு பிறகும் அதிரடியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டு கொண்டே வருகிறது. ஏற்கனவே ஒரே ஒரு தொடருக்கு மட்டும் பாகிஸ்தான் டி20 அணிக்கு ஷாகின் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டார். பிறகு அவர் நீக்கப்பட்டு உடனடியாக பாபர் அசாம் கொண்டுவரப்பட்டார்.
இதற்கு அடுத்து டி20 அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கவும் பட்டார். ஆனால் மீண்டும் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அடுத்து அவருக்கு ஏற்ற ஒருநாள் வடிவத்தில் அவர் தேர்வு செய்யாமல் நீக்கப்பட்டார். இப்படி பாகிஸ்தான் தேர்வுக் குழு பல மோசமான முடிவுகளை எடுத்து வருகிறது.
இதுகுறித்து ஷாகித் அப்ரிடி பேசும் பொழுது “தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக பாகிஸ்தான் ஒரு நாள் தொடரை இழந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தேர்வுக் குழு என்று நான் சொல்லுவேன். ஏனென்றால் இந்த அணி வீரர்களுடன் நாம் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளோம். எந்த வடிவத்திற்கு யார் கேப்டன் பொறுப்புக்கு சரியாக இருப்பார்கள் என்று கூட இவர்களுக்கு தெரியவில்லை”
இதையும் படிங்க : டீம்ல ஒரு மலையாளி இருந்தா அந்த மேஜிக் நடக்கும்.. சஞ்சுவை சேர்த்தது மாஸ்டர் ஸ்ட்ரோக் – வருண் சக்கரவர்த்தி பேச்சு
“நீங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு அறுவை சிகிச்சை செய்கிறீர்கள் என்று தொடர்ந்து செய்கிறீர்கள். திடீரென உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து சில இளைஞர்களை கூட்டிக்கொண்டு வந்து அறிமுகப்படுத்துகிறீர்கள். பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் தரம் மிகவும் மோசமாக உள்ளது. அந்த வீரர்களால் நிலைக்க முடியாது. ஒருவேளை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அது தேர்வு குழுவில்தான் செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.