பாபர் அசாமா ? விராட் கோலியா ? ஷாகின் அப்ரிடி வினோத பதில்

0
204
Virat Kohli Babar Azam and Shaheen Afridi

கடந்த இரண்டு வருடங்களாக 22 வயதான பாகிஸ்தானின் இடக்கை பந்து வீச்சாளரான ஷாகின் ஷா அப்ரிடியின் பந்துவீச்சு மிகத் தரமாக மெருகேறி வந்திருக்கிறது. அவர் இளம் வயது வீரர் என்பதால் குறிப்பிடத்தக்க அளவில் சாதனைகளைப் பந்துவீச்சில் நிகழ்த்துவார் என்று நம்பலாம்.

கடந்த வருடம் யு.ஏ.இ-யில் நடந்த டி20 உலகக்கோப்பையில் ஷாகின் ஷா அப்ரிடி தன் ஸ்விங் பவுலிங் மற்றும் ஸ்விங்கிங் யார்க்கர்களால் இந்திய அணியை தோல்வியடை வைத்ததை இந்திய கிரிக்கெட் இரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ரோகித் ஷர்மாவை ஸ்விங்கிங் யார்க்கராலும், கே.எல்.ராகுலை இன்-ஸ்விங்கிலும், விராட்கோலியை பவுன்சரிலும் வெளியேற்றி இருப்பார்.

- Advertisement -

இந்த வருடத்தில் தொடர்ந்து ஓய்வில்லாமல் ஷாகின் ஷா அப்ரிடி விளையாடி வருகிறார். இந்த ஆண்டு பாகிஸ்தான் டி 20 தொடரான பி.எஸ்.எல்-ல் லாகூர் க்லாண்டர்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி முதல் முறை சாம்பியனாகவும் ஆக்கியிருந்தார். அடுத்து பாகிஸ்தான் வந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் விளையாடினார். இதற்கடுத்து இங்கிலாந்திற்கு கவுன்டி சாம்பியன்ஷிப் விளையாட சென்றார். இதற்கடுத்து பாகிஸ்தான் திரும்பி வந்து வெஸ்ட் அணிக்கு எதிராக விளையாடி வருகிறார்.

இவரிடம் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு வீடியோ நேர்க்காணலில் சில முக்கியமான சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவரும் சுவராசியமாகவே பதில் அளித்தார். லண்டனா? லாகூரா?, மெஸ்ஸியா? ரொனால்டோவா?, யார்க்கரா? பவுன்சரா? என்ற கேள்விகளுக்கு, லாகூர், இருவருமே, யார்க்கர் என்று பதில் அளித்துள்ளார்.

அடுத்து 50 ஓவர் உலகக்கோப்பையா? 20 ஓவர் உலகக்கோப்பையா?, ஐ.பி.எல்-லா? பி.எஸ்.ல்-லா?, ஜோ ரூட்டா? கேன் வில்லியம்சனா? என்ற கேள்விகளுக்கு 20 ஓவர் உலகக்கோப்பை, பி.எஸ்.ல், இருவரும் என்று பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

அதற்கடுத்து, ஷாகின்ஷா அப்ரிடியா? ஷாகித் அப்ரிடியா?, பட்லரா? ரிஸ்வானா?, பாபரா? விராட்கோலியா? என்று கேட்க ஷாகின் ஷா அப்ரிடி, ரிஸ்வான், இருவரும் என்று பதில் அளித்துள்ளார். பட்லரா? ரிஸ்வானா? என்று கேட்ட பொழுது ரிஸ்வான் என்று பதில் அளித்தவர், பாபரா? விராட்கோலியா? எனும் போது இருவரையுமே பிடிக்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது!