கம்பீர் அகர்கர் பிரஸ் மீட்.. வெளியிடப்பட்ட முக்கிய 7 விஷயங்கள்.. இந்திய கிரிக்கெட் இனி இப்படித்தான் இருக்கும்

0
1054
Gambhir

இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு இரண்டு இந்திய அணிகளும் அறிவிக்கப்பட்டன. தற்போது இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து இந்திய புதிய தலைமை பேச்சாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அவர்கள் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டதும் விராட் கோலிக்கும் அவருக்குமான உறவு அணியில் எப்படி இருக்கும்? என்பது பெரிய கேள்வியாக இருந்தது. ஏனென்றால் இருவரும் ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பு இரண்டு முறை வாய்த் தகராறில் பெரிய அளவில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் ஹர்திக் பாண்டியாவை இந்திய டி20 அணிக்கு கேப்டன் ஆக்காமல் சூரியகுமார் யாதவை ஆக்கி இருக்கிறார்கள். சுக்மன் கில்லை இரண்டு அணியிலும் தேர்வு செய்ததோடு, அவருக்கு இரண்டு அணியிலும் துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் இரண்டு அணியிலும் ருதுராஜ் புறக்கணிக்கப்பட்டார்.

மேலும் அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படவில்லை. இதேபோல் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் வயதாகின்ற காரணத்தினால் அவர்களுடைய ஓய்வு எப்பொழுது இருக்கும்? என்பது குறித்த அனைத்து எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இருவரது பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறப்பட்ட ஏழு முக்கியமான விஷயங்களை கீழே பார்க்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் கோச் ஆனதும் கோலி கிட்ட பேசினேன்.. ரோகித் கோலி இதுவரைதான் விளையாடுவாங்க – கம்பீர் பேட்டி

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் உடல் தகுதியுடன் இருந்து அவர்கள் விரும்பினால் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடலாம்.

கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு இடையே உறவு மிகவும் சுமூகமாக இருந்து வருகிறது.

ஜடேஜாவை ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கவில்லை அவருக்கு ஓய்வுதான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சூரியகுமார் இந்திய டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவார்.

சுப்மன் கில் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்குமான வீரராகப் பார்க்கப்படுகிறார்.

ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் அடைகின்ற காரணத்தினால் கேப்டன் பொறுப்புக்கு தேர்வு செய்யப்படவில்லை.

முகமது ஷமி பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு திரும்புகிறார்.

- Advertisement -