டாப் 10

அதிக அளவில் ஜூனியர் போட்டிகளில் விளையாடமல் இந்திய சீனியர் அணியில் விளையாடிய 5 கிரிக்கெட் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் வரைமுறை படி ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஜூனியர் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக பங்களிக்க வேண்டும். அவர்களது திறமையை பொருத்து ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அதன் பின்னர் அதிலும் தொடர்ச்சியாக நன்றாக பங்களிக்க வேண்டும். அப்படி அப்படி நன்றாக பங்களித்து வரும் பட்சத்தில் அவர்களுக்கு சீனியர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

- Advertisement -

ஆனால் ஒரு சில வீரர்கள் ஜூனியர் லெவல் கிரிக்கெட் போட்டியில் மிக கம்மியாக விளையாடி அதே சமயம் மிக சிறப்பாக விளையாடி சீக்கிரமாகவே இந்திய சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்று விடுவார்கள். அப்படி வெகுவிரைவில் இந்திய சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற ஒரு சில இந்திய வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்.

1. சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் தனது 16வது வயதில் இந்திய அணிக்காக முதல் ஒருநாள் போட்டியில் விளையாட ஆரம்பித்தார். 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அவர் தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடத் தொடங்கினார். அவர் விளையாடிய காலத்தில் இவ்வளவு சீக்கிரமாக இந்திய சீனியர் அணியில் வந்து விளையாடிய ஒரே வீரர் அவர் மட்டும்தான்.

அவரது திறமையை மதித்து இந்திய அணி கொடுத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய அணிக்காக தற்போது வரை அதிக ரன்கள் மட்டும் அதிக சதங்கள் அடித்த ஒரு வீரராக இன்றும் நிலைத்து நிற்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2. மணிந்தேர் சிங்

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக 17 வயதில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியை விளையாடத் தொடங்கிய ஒரு வீரர் இவர். 1983 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவர் தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாட தொடங்கினார்.

ஆரம்பத்தில் இவர் விளையாடுவதை பார்த்து இந்திய அணியின் ஒரு தலை சிறந்த வீரராக இவர் வருவார் என்று அனைவரும் கணித்தனர். அவ்வளவு அற்புதமாக லெக் ஸ்பின் பவுலிங்கை வீசக்கூடிய வல்லவர் இவர். ஆனால் இவரால் தொடர்ச்சியாக நன்றாக விளையாட முடியாத காரணத்தினால், இந்திய அணிக்காக வெறும் 35 ஒருநாள் போட்டிகளில் தான் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஹர்பஜன் சிங்

தனது 17 வயதில் 1998 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாட தொடங்கினார். ஒருநாள் போட்டியில் நன்றாக விளையாடி இதை கண்ட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இவருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை வழங்கியது.

அதன் பின்னர் டெஸ்ட் போட்டியில் மிக சிறப்பாக இந்திய அணிக்காக விளையாடி 400 டெஸ்ட் விக்கெட்டுகளைக் மேல் கைப்பற்றியுள்ளார். இன்னும் இவர் தனது ஓய்வை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4. பார்த்திவ் படேல்

தனது 17வது வயதில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இவர் களமிறங்கினார். இவர் களமிறங்கிய வேளையில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாடி வந்தார். அதன் பின்னர் 2004 – 05 ஆண்டுகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இவர் விளையாடத் தொடங்கினார்.

இருப்பினும் சில காலம் விளையாடிய பின்னர் தனது விக்கெட் கீப்பிங் பணியை மகேந்திர சிங் தோனி இடம் இவர் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. சேட்டன் சர்மா

சேட்டன் சர்மா தனது 17வது வயதில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1983-ஆம் வருடம் தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். ஆரம்பத்தில் இவர் மிக அற்புதமாக விளையாடி அனைவரிடமும் நற்பெயரை பெற்றுக்கொண்டார்.

1987ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இவர் ஒரு போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். அதன்மூலம் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by