இவரை 4 மாதம் என்னிடம் அனுப்பி வையுங்கள் தலை சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக மாற்றிக் காட்டுகிறேன் – முகமது ஷமியின் சவால் பற்றி கூறிய பத்ருதீன் சித்திக்

0
192

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி பெற்று தொடரில் இருந்து வெளியேறியது. இருப்பினும் அந்த அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் மோசின் கான் மிக அற்புதமாக அந்த அணிக்கு விளையாடி இருந்தார். 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். முக்கியமாக அவருடைய பௌலிங் எக்கானமி 5.96 மட்டுமே.

ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து போல இவருக்கும் நிறைய பாராட்டுகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது. அவர் சம்பந்தமாக இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தன்னிடம் பேசிய விஷயங்களை தற்போது பயிற்சியாளர் பத்ருதீன் சித்திக் நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

ஏலத்தில் அவர் கைப்பற்றிய பொழுது நாங்கள் இருவரும் பேசிக் கொண்டோம்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மிக ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது நாங்கள் இருவரும் (பயிற்சியாளர் பத்ருதீன் சித்திக் மற்றும் முகமது ஷமி) ஒன்றாகத்தான் இருந்தோம்.

முதலில் முகமது ஷமி லக்னோ அணி நிர்வாகம் மூலமாக கைப்பற்றப்பட்டார். பின்னர் அடிப்படை தொகையான 20 லட்ச ரூபாய்க்கு மோசின் கான் லக்னோ அணி நிர்வாகம் மூலமாகவே கைப்பற்றப்பட்டார். உடனே முகமது ஷமி என்னிடம் இவரை மட்டும் என்னிடம் நான்கு மாதம் அனுப்பி வையுங்கள். நான் இவரை தலைசிறந்த ஆல்ரவுண்டர் வீரராக உருமாற்றிக் காட்டுகிறேன் என்று என்னிடம் கூறினார்.

- Advertisement -

உண்மையில் மோசின் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன். அவருக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் மிக சிறப்பாக வரும். லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் கூட “விளையாட்டைப் பற்றிய நல்ல புரிதல் மோசினிடம் இருக்கிறது” என்று வெகுவாக பாராட்டி இருந்தார்.

இளம் வீரர்களுக்கு உதவுவதில் எந்தவித தயக்கமும் முகமது ஷமி காட்டமாட்டார்

இன்று நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கலாம். ஆனால் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் எப்பொழுதும் எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த விதத்தில் பந்துவீச வேண்டும் என்று நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த விஷயத்தில் இன்று முகமது சமி சிறந்த வேகப்பந்துவீச்சாளர். சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவுவதில் அவர் எப்பொழுதும் எந்த வித தயக்கமும் காட்டமாட்டார் என்று பெருமையாக பத்ருதீன் சித்திக் பேசியுள்ளார்.

(பத்ருதீன் சித்திக் முகமது ஷமியின் முன்னாள் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று மேல் குறிப்பிடப்பட்டுள்ள மோசின் கானும் அவரிடம் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது).