இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. மோசமாக விளையாடி முதல் இரண்டு போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்தது!
இந்த நிலையில் வாழ்வா சாவா போட்டியான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி நேற்று வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக மோதியது. இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் குறிப்பாக சூரியகுமார் யாதவ் தன்னுடைய பழைய டி20 ஃபார்முக்கு திரும்பி வந்தார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நேற்றைய மெதுவான ஆடுகளத்தில் 159 என்கின்ற நல்ல ரன்களையே எடுத்தது. நேற்று பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் இந்திய தரப்பில் நன்றாக இருந்தது.
இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் ஏமாற்ற, சூரியகுமார் யாதவ் மற்றும் இளம் வீரர் திலக் வர்மா இருவரும் சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியதோடு மட்டுமல்லாமல் அதிரடியில் மிரட்டவும் செய்தார்கள்.
சூரியகுமார் யாதவின் ஆட்டம் எப்படி என்று நமக்கு தெரிந்ததுதான். ஆனால் திலக் வர்மாவின் ஆட்டம் அதிரடி மட்டும் கிடையாது மிகுந்த புத்திசாலித்தனமானது. புதிய பந்தில் பவர் பிளேவில் வந்ததும் அதிரடி காட்டிய அவர், அடுத்து பவர் பிளே முடிய சூரிய குமாருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாட ஆரம்பித்து விட்டார். அதே சூரியகுமார் 44 பந்தில் 83 ரன்கள் எடுத்து வெளியேற, மீண்டும் தன்னுடைய அதிரடிக்கு திரும்பி வந்தார்.
இப்படி மிகப் பொறுப்பாக விளையாடி தனது தொடர்ச்சியான இரண்டாவது அரசத்தை நோக்கி அறிமுக தொடரில் சென்று கொண்டு இருந்தார் இளைஞர் திலக் வர்மா. இந்த நேரத்தில் அவருடன் நின்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா அடித்து ஆட்டத்தை முடி என்று ஹிந்தியில் கூறினார். ஆனால் வருகின்ற பந்துக்கு தகுந்தவாறு மட்டுமே திலக் விளையாடினார்.
இப்படியான நேரத்தில் 10 ரன்களுக்கு பக்கம் மீதம் இருந்த நிலையில், திலக் வர்மாவின் அரை சதத்திற்கு ஒன்றிரண்டு ரன்களே தேவைப்பட்ட நிலையில், அவருக்கு ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து கொடுத்து, அவரை அரை சதம் அடிக்க விடாமல், கேப்டன் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாகப் பந்துகளை சிக்ஸருக்கு அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பந்தை சிக்ஸருக்கு அடித்து ஆட்டத்தை முடித்தார். அப்பொழுது திலக் ஒரு மாவின் அரை சதத்திற்கு ஒரு ரன் தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாட்டை விமர்சித்து சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரை செல்பிஷ் ஹர்திக் பாண்டியா என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் பொதுவாகவே இவரது இந்த செயலை கண்டித்து பலரும் பல சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
Don't you dare to compare chhapri #HardikPandya with this legend#MS #Dhoni pic.twitter.com/YT7okz9D7j
— PJ says (@PjPriyank2) August 8, 2023
There are certain things which can't be taught. #SanjuSamson #HardikPandya #selfish #pandyaselfish pic.twitter.com/63ufvvNrNM
— Achyuth Vimal (@achyuthvimal) August 8, 2023






