“வந்தியா வேலை செஞ்சியா போயிட்டே இருக்கணும்” – இந்திய ரசிகர்களை சீண்டிய ஹாரி ப்ரூக்சிற்கு விரேந்தர் சேவாக் பதிலடி!

0
4142

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை இயற்றியிருக்கிறது . பிளே ஆப் சுற்று தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றிருக்கும் பத்து அணிகளுமே முதல் நான்கு இடங்களுக்காக கடுமையாக போராடி வருகின்றன .

தற்போது புள்ளிகள் பட்டியலில் குஜராத் அணி முதலிடத்திலும் சென்னை அணி இரண்டாவது இடத்திலும் இருக்கிறது . இன்று நடைபெற இருக்கும் போட்டியில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் மோத இருக்கின்றன . நடைபெறும் ஒவ்வொரு போட்டிகளுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது .

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரூக்ஸ் பரிசளிப்பு விழாவின் போது பேசிய சர்ச்சையான பேச்சுக்கு வீரேந்தர் சேவாக் பதிலடி கொடுத்திருக்கிறார் . மேலும் இளம்பிறர்க்கு அவர் அறிவுரையும் வழங்கி இருக்கிறார் .

இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரூக்ஸ். டெஸ்ட் ஒரு நாள் மற்றும் டி20 என அனைத்து வடிவ போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் . டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தின் போது 13.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது ஹைதராபாத் அணி .

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் இவரும் ஒருவர் . ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் ஒரே ஒரு முறை மட்டுமே சதம் எடுத்தார் . பெரும்பாலான போட்டிகளில் இவர் ஒற்றை இலக்க ரண்களிலேயே ஆட்டம் இழந்தார். இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேலி செய்து வந்தனர் . கொல்கத்தா அணியுடன் ஆட்டத்தின் போது 55 பந்துகளில் சதம் எடுத்த இவர் ஆட்ட நாயகன் விருது வாங்கும் போது இந்திய ரசிகர்களின் வாயை அடைத்து விட்டதாக தெரிவித்து இருந்தார் . ஆனால் அதற்குப் பிறகு ஆடிய ஐந்து ஆட்டங்களில் முறையே 9,18.7,0,0 ரண்களில் ஆட்டம் இழந்ததால் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

- Advertisement -

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் வீரேந்தர் சேவாக் ” நீங்கள் ஏன் கேலி செய்வதை பற்றி யோசிக்கிறீர்கள் கேலி செய்யப்படுவதால் ஏன் குழப்பம் அடைகின்றீர்கள் யார் கேலி செய்கிறார்கள் அல்லது யார் பாராட்டுகிறார்கள் என்பதை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும் . உங்கள் வேலை கடினமாக உழைப்பது சிறப்பான பங்களிப்பை அணிக்கு வழங்குவது தான் உங்களுக்கு ஏதேனும் விருப்பமாக இருந்தால் அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள் . ஆனால் அதற்கு பதில் அளித்துக் கொண்டு இருக்காதீர்கள் . உங்கள் வேலையை நீங்கள் பார்ப்பது தான் சிறந்தது . பொழுதுபோக்கிற்காக திரைப்படங்கள் பாருங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் இசையை ரசியுங்கள்” என்று கூறி இருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசி இருக்கும் அவர் ” சமூக ஊடகங்கள் என்பது அனைத்தையும் பார்ப்பதற்கான ஒரு இடம் மட்டுமே . ஏதேனும் நமக்குத் தோன்றினால் அதனை போஸ்ட் செய்யலாம் . அவற்றைக் கண்டு பயப்படக்கூடாது . இன்று மோசமான ஆட்டத்தால் உங்களை கேலி செய்பவர்கள் நாளை திறமையாக ஆடி நிறைய ரன்களை சேர்த்தால் பாராட்டுவார்கள்” என்று கூறி முடித்தார்.