“இந்த இந்திய வீரரை எந்த நாட்டு கேப்டனாலும் களத்தில் கட்டுப்படுத்த முடியாது” – நியூசி ஆல்ரவுண்டர் உறுதி

0
2178
Scot styris

உலக கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை எடுத்துக்கொண்டால் அவர் எப்பொழுது எப்படிச் செயல்பட்டாலும் உலகக்கோப்பை தொடர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்துவார்கள். 96 உலகக்கோப்பையில் இலங்கை அணி கேப்டன் ஜெயசூர்யாவை வைத்து முயற்சித்ததை அதற்கு முன்பு உலகக் கோப்பையில் முயற்சித்து வெற்றி அடைந்தது நியூசிலாந்து அணிதான்!

நியூசிலாந்து அணி என்றாலே திட்டமிடலும் அதை அப்படியே களத்தில் செயல்படுத்துவம்தான். அவர்கள் எல்லா அணிக்கும், எல்லா வீரர்களுக்கும் எதிராராகவும் திட்டங்களைத் தயாரித்துச் செயல்படுத்தக் கூடியவர்கள். ஒரு உலகக்கோப்பைக்கும் அடுத்த உலகக்கோப்பைக்கும் இடையில், உலகக் கிரிக்கெட்டில் பெரிய பேசுப்பொருளாய் இருக்க மாட்டார்கள். ஆனால் உலகக்கோப்பையில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு இறுதிபோட்டிக்கு வந்து, பல அணிகளின் கனவில் மண்ணைப் போட்டுவிடுவார்கள்.

- Advertisement -

நியூசாலாந்தின் மக்கள் தொகை வெறும் 50 இலட்சம் என்பதால், அங்கு உருவாகும் வீரர்கள் பெரும்பாலும் ஆல்ரவுண்டராகவே தயாராகி வருவார்கள். ஏறக்குறைய எல்லா பேட்ஸ்மேன்களுமே பந்து வீசுவார்கள். இப்படியான நியூசிலாந்து சூழலிலிருந்து வந்த ரைட் ஹேன்ட் மீடியம் பவுலிங் அன்ட் பேட்டிங் ஆல்ரவுண்டர்தான் ஸ்காட் ஸ்டைரிஸ். இவரின் தற்போதைய விருப்பத்துக்குரிய வீரர் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ். சூர்யகுமார் யாதவை பற்றி அவர் சில விசயங்களை அலசி கூறியிருக்கிறார்.

அவர் சூர்யகுமார் பற்றித் தெரிவித்துள்ளது “சூர்யகுமாரை பற்றி நான் அதிகம் பேச விரும்புவதற்குக் காரணம், மைதானத்தின் எல்லாப் பக்கத்திலும் ரன் அடிக்க முடிந்த அவரது திறமைதான். எதிரணி கேப்டன்கள் அவரிடமிருந்து களத்தைக் காப்பது கடினமான காரியமாக இருக்கிறது. அவரல் 360 டிகிரியில் விளையாட முடிகிறது. அவர் வழக்கமான மரபு சார்ந்த பேட்ஸ்மேன் கிடையாது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக லங் ஆன், ஓவர் லாங் ஆப் இல்லாது எக்ஸ்ட்ரா கவர், பைன் லெக் என ரன் எடுக்க அவருக்குப் பல வழிகள் இருக்கின்றன” என்று தெரிவித்தார்!

மேலும் பேசிய அவர் “இப்படியிருக்கும் போது அவர் தன்னைச் சுற்றியுள்ள பேட்ஸ்மேன்களில் இருந்து, ஒரு எக்ஸ் பேக்டராய் இருக்கிறார். என்ன வகையான பந்துவீச்சு, ரைட்டா லெப்ட்டா, யார் வீசுகிறார்கள், என்ன மைதானங்கள் என்பதெல்லாம் அவருக்குப் பொருட்டே இல்லை. அவரால் யாருக்கு எதிராகவும் எங்கும் சிறப்பாக விளையாட முடியும். சிறப்பான வீரர்களை எந்த வரிசையில் விளையாடவிட்டாலும் சிறப்பாகத்தான் விளையாடுவார்கள். சூர்யகுமாரை எங்கு விளையாட விட்டாலும் அவர் சிறப்பாங விளையாடுவார். அவர் துவக்க வீரராய் வந்ததிர் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை” என்றும் தெரிவித்தார்!

- Advertisement -