இந்திய கிரிக்கெட்

இந்தியா அடுத்து ஆடும் 3 முக்கிய தொடர்கள்.. மூன்றே நாளில் ஆரம்பிக்கும் முதல் தொடர் – முழு விபரங்கள்

தற்போது ஆசிய கோப்பையை கைப்பற்றி இருக்கும் இந்திய அணி அடுத்து மூன்று முக்கிய தொடர்களில் விளையாட இருக்கிறது. அதற்கான அட்டவணையை கீழே பார்க்கலாம்.

- Advertisement -

இந்திய அணி அதிக வெப்பம் மிகுந்த யுஏஇ கண்டிஷனில் ஆசியக் கோப்பையை அடுத்தடுத்த நாட்களில் விளையாடி வென்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து மூன்று நாள் இடைவெளியில் மீண்டும் இந்திய அணி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாளில் முதல் தொடர்

இந்திய அணி அடுத்த மூன்று நாளில் வரும் வியாழக்கிழமை அக்டோபர் 2ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 10ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டியில் டெல்லி மைதானத்தில் விளையாடுகிறது.

இதைத்தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலிய விற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கே இருக்கிறது. 3 ஒருநாள் போட்டிகள் அக்டோபர் 19, 23, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 29, 31, நவம்பர் 2, 6, 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

- Advertisement -

மூன்றாவது தொடர்

இதற்கடுத்து இந்தியா திரும்பும் இந்திய அணி சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இதையும் படிங்க : சூரியகுமார் ரன் பின்கோடு மாதிரி இருக்கு.. கில் இருந்தால் உலக கோப்பை கிடைக்காது – ஸ்ரீகாந்த் விமர்சனம்

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 14 மற்றும் நவம்பர் 22ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நவம்பர் 30, டிசம்பர் 3, 6 ஆகிய தேதிகளிலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 9, 11, 14, 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

- Advertisement -
Published by
Tags: BCCIIct

Recent Posts