SAvsNZ.. 31 வருடத்தில் முதல் முறை.. குயிண்டன் டிகாக் தனி சாதனை.. நியூசிலாந்து அணிக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து!

0
747
Quinton

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் புனே மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மிக முக்கியமான போட்டியில் விளையாடி வருகின்றன.

ஆறு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா ஐந்து வெற்றிகள் பெற்றிருக்கிறது. ஆறு போட்டிகளில் நியூசிலாந்து நான்கு வெற்றிகள் பெற்றிருக்கிறது. எனவே இந்த போட்டி நியூசிலாந்து அணிக்கு மிக முக்கியமான போட்டி. நியூசிலாந்து இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதிவேகப் பந்துவீச்சாளர் பெர்குசனுக்கு பதிலாக டிம் சவுதி இடம் பெற்றார். தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடா மீண்டும் வந்தார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்கம் தர வந்த கேப்டன் டெம்பா பவுமா 28 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கடுத்து வான்டர் டெசன் குயின்டன் டி காக் உடன் இணைந்து விளையாட ஆரம்பித்தார்.

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 100 ரன் பார்ட்னர்ஷிப்பை கடந்தது. மேலும் இருவருமே அரை சதங்கள் கடந்தார்கள். இதன்மூலம் குயிண்டன் டிகாக் நடப்பு உலகக் கோப்பை தொடரில் 500 ரன்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் ஆகியிருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணி இன வெறியின் காரணமாக 1970 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் கிரிக்கெட்டுக்குள் வந்து, 1992 ஆம் ஆண்டு முதல் முதலாக உலகக் கோப்பையில் விளையாடியது.

அப்போது இருந்து இப்போது வரையில், எந்த ஒரு தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேனும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 500 ரன்கள் எடுத்தது கிடையாது. தென் ஆப்பிரிக்காவின் 31 வருட உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக குயிண்டன் டிகாக் 500 ரன்களை அடித்திருக்கிறார். மேலும் இவரே அதிக ரன் அடித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். மற்ற இடங்களில் இருப்பவர்களை கீழே பார்க்கலாம்.

டேவிட் வார்னர் 413 ரன்கள்
ரச்சின் ரவீந்தரா 406 ரன்கள்
ரோகித் சர்மா 398 ரன்கள்
மொஹமத் ரிஸ்வான் 359 ரன்கள்
எய்டன் மார்க்ரம் 356 ரன்கள்
விராட் கோலி 354 ரன்கள்