SAT20 பைனல்.. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் காவ்யா டீம் சாம்பியன்.. டர்பன் அணி பரிதாபத் தோல்வி

0
5258
SEC

சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் இரண்டாவது சீசனின் இறுதிப்போட்டி இரவு நியூ லேண்ட்ஸ் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

- Advertisement -

டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் மலான் 4 பந்துகளில் ஒரு பவுண்டரி உடன் 6 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ஜோர்டன் ஹெர்மான் மற்றும் அபெல் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஜோர்டன் ஹெர்மான் 26 பந்தில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 42 ரன்கள், அபெல் 34 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் மார்க்ரம் மற்றும் ஸ்ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதோடு, அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் அணி 204 ரன்கள் எடுக்க காரணமாக இருந்தார்கள்.

- Advertisement -

இறுதி வரை ஆட்டம் இழக்காத கேப்டன் எய்டன் மார்க்ரம் 26 பந்தில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 42 ரன்கள், ஸ்ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 30 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 56ரன்கள் எடுத்தார்கள்.டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணித்தரப்பில் கேப்டன் கேசவ் மகாராஜ் 2 விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து 25 என்கின்ற பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் 3, பிரிட்ஸ்கி 18, ஸ்மட்ஸ் 1, வியான் முல்டர் 38, ஹென்றி கிளாசன் 0 என முக்கிய முதல் 6 விக்கெட்டுகள் 10.5 ஓவரில் 69 ரன்களுக்கு விழுந்தது.

இதற்கு அடுத்து எஞ்சிய நான்கு விக்கெட்டுகளும் டிவைன் பிரிட்டோரியஸ் 28, கேசவ் மகாராஜ் 5, ஜூனியர் டாலா 15, ரீஸ் டாப்லி 0 ரன்கள் என விழுந்தது. நவீன் உல் ஹக் ஆட்டம் இழக்காமல் மூன்று ரன்கள் எடுத்திருந்தார். டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 17 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மார்க்கோ யான்சன் நான்கு ஓவர்களுக்கு 30 ரன்களுக்கு ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : 3வது டெஸ்ட்.. சர்பராஸ் கான் விளையாட வாய்ப்பு இருக்கிறதா?.. இந்திய அணி எப்படி அமையும்?

சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் ஐபிஎல் தொடரில் முதலாளிகளால் அணிகள் வாங்கப்பட்டு இத்தோடு இரண்டாவது சீசன் நடைபெற்று முடிந்திருக்கிறது. முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, இரண்டாவது சீசனிலும் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது. அணி உரிமையாளர் காவியாவை ஐபிஎல் தொடர் தொடர்ந்து சோகப்படுத்த, சவுத் ஆப்பிரிக்கா டி20 தொடர் தொடர்ந்து மகிழ்ச்சி படுத்தி வருகிறது.