இந்திய கிரிக்கெட்

110 பந்தில் 100 ரன்.. சச்சின் கோலி சாதனை பட்டியலில் இணைந்த சர்பராஸ் கான்.. நியூசிலாந்து டெஸ்ட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் நிலையில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் சர்பராஸ் கான் ஒரு சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.

சர்பராஸ் கான் அபார சதம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெங்களூரில் தற்போது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்கள் மட்டும் குவித்து ஆட்டம் இழந்த இந்திய அணி அதற்குப் பிறகு நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்திற்கு பிறகு இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது. இதில் 70 ரன்கள் குவித்திருந்த இளம் இந்திய வீரர் சப்ராஸ்கான் தனது நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சுலபமாக விளையாடி தனது ரன் வேட்டையை தொடர்ந்து கொண்டே இருந்தார். 110 பந்துகளை எதிர் கொண்டு சிறப்பாக விளையாடி சதம் அடித்ததன் மூலமாக ஒரு சிறப்பான சாதனையை படைத்த ஒன்பதாவது இந்திய வீரராக மாறி இருக்கிறார். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி வெளியேறி இருந்த சர்பராஸ் கான் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்தார்

இதன் மூலமாக ஒரு அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் டக் அவுட் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த ஒன்பதாவது இந்திய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி இரண்டாவது இன்னிங்சில் 136 ரன்களும் குவித்திருந்தார். அதேபோல இந்திய வீரர் விராட் கோலி 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் 104 ரன்கள் குவித்திருந்தார்.

இதையும் படிங்க:122 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்.. டிம் சவுத்தி படைத்த அபார சாதனை.. மோசமான பெருமைக்கு ஆளாகிய இந்திய அணி

மேலும் இந்திய வீரர் சிகார் தவான் 2014 ஆம் ஆண்டு இதே நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் 114 ரன்கள் குவித்தார். மேலும் இந்தியாவின் இளம் வீரர் கில் இதே ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் 114 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல இந்திய முன்னாள் வீரர்கள் முகமது அசாருதீன் திலீப் வெங்கட்சர்கார், சுனில் கவாஸ்கர் ஆகியோரும் இந்த பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by