ரஞ்சி டிராபியில் அதிரடி ஃபார்மை வெளிக்காட்டி இந்திய அணியில் நுழைந்த சர்ப்பராஸ் கான் – பிசிசிஐ தகவல்

0
620
Sarfaraz Khan

இந்திய கிரிக்கெட்டில் தற்போது இந்தக் காலக்கட்டம் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகிகளுக்கு பெரிய நெருக்கடியான காலக்கட்டம் என்றே கூறலாம். காரணம், பல திறமையான புதிய இளம் வீரர்கள் திறமையைக்காட்டி அணியின் கதவை பலமாய் தட்டிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்களும் திரும்பி வந்து திறமையைக் காட்டி, தேர்வில் தவிர்க்க முடியாத வீரர்களாக நிற்கிறார்கள். இதனால் யாரை சேர்ப்பது? யாரை விடுவது? என்று நெருக்கடியில் இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் இருக்கிறார்கள்.

உதாரணமாக, ஜாகீர் கானுக்குப் பிறகு நல்ல இடக்கை வேகப்பந்து வீச்சாளர் என்ற குறை நீண்ட காலமாக இருந்து வந்தது, இந்த நிலையில் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அர்ஷ்தீப் சிங், மோசின் கான், யாஷ் தயால் என்று மூன்று இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் திறமையைக் காட்டி இருக்கிறார்கள். நடுவில் அதிவேகமாகப் பந்துவீசி வலக்கை வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் வந்து நிற்கிறார்கள். இதில்லாமல் காயத்தால் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் நடராஜன் சிகிச்சையில் இருக்கிறார்!

- Advertisement -

இப்பொழுது இவர்களைப் போல இன்னொரு இந்திய வீரர் தேர்வாளர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கி இருக்கிறார். ஆனால் அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் உருவாக்கவில்லை, சிவப்புப்பந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் உருவாக்கி இருக்கிறார்.

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் இருந்து, டெஸ்ட் மட்டுமே விளையாடி வந்த மூத்த வீரர்கள் புஜாரா, ரஹானே இருவரும் நீக்கப்பட்டு, அவர்களின் இடங்களுக்கு ஹனுமா விகாரி, ஸ்ரேயாஷ் கொண்டுவரப்பட்டார்கள். இதில் புஜாரா இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் விளையாட சென்று சதங்களாகக் குவித்து, இழந்த பார்மை மீட்டு, இங்கிலாந்து அணியுடனான இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்து விட்டார். ரகானே ஐ.பி.எல் விளையாடி சிக்கிக்கொண்டார்!

இந்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி தொடரில் கடந்த இரு சீசன்களாக முச்சதம், இரட்டை சதம், சதம் என ஏழுசதங்களை மும்பை அணிக்காக விளாசியிருக்கும் சப்ராஸ்கான், இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறார். இந்த ஆண்டு ரஞ்சி சீசனில் எட்டு இன்னிங்ஸில் மட்டும் 275, 63, 48, 165, 153, 40, 59, 134 என 937 ரன்களை 133.85 என்ற அசாதாரண சராசரியில் குவித்து, இந்த ஆண்டு ரஞ்சி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இவர், ஆஸ்திரேலியாவின் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்து, நவம்பர் மாதம் இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய பங்களாதேஷ் அணியோடு விளையாடுகிறது. இந்தத் தொடரில் சப்ராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு ஆவார் என்று கூறப்படுகிறது!