டி20 உலகக் கோப்பை 2024

ரோகித் சர்மா இந்த ஒரு விஷயத்தைப் பற்றி கவலையே பட மாட்டார்.. இதைத்தான் கத்துக்குறேன் – சஞ்சு சாம்சன் பேட்டி

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் சுற்று தாண்டி இரண்டாவது சுற்றை எட்டி இருக்கிறது. கேப்டனாக ரோஹித் சர்மா வீரர்களை ஒருங்கிணைத்து வழி நடத்துவதில் மிகச் சிறப்பாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்திய வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா பற்றி தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த வகையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ் சஞ்சு சாம்சன் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் கேப்டன் ரோஹித் சர்மா பற்றிய தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

ரிஷப் பண்ட் முதலில் கூறும் பொழுது “கிரிக்கெட் பற்றி உங்களுக்கே தெரியும் இங்கு வித்தியாசமான முறையில்தான் முன்னேற்றம் கிடைக்கும். நீங்கள் இங்கு தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். ரோகித் சர்மா நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். ஆனாலும் அவர் தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கிறார். இதைத்தான் நான் அவரிடம் ரசிக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “அவர் தனது விளையாட்டை மிகவும் நன்றாக புரிந்து இருக்கிறார். எப்பொழுதெல்லாம் சிக்கலான நிலைமைகள் இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் உடனே அவர் அடிப்படையான விஷயங்களில் சென்று வேலை செய்கிறார். இதுதான் ரோஹித் சர்மாவிடம் விரும்பக்கூடிய விஷயம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் தெரிவிக்கும் பொழுது “இளைஞர்களாகிய நாம் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் எப்படி நாம் எப்பொழுதும் சுயத்துடன் இருப்பது என்பதைதான். எத்தனை கேமராக்கள் அவரைப் பார்க்கின்றன? எத்தனை ஸ்டெம்ப் மைக்குகள் அவர் பேசுவதை கேட்கின்றன? என்பது பற்றி அவர் எப்பொழுதும் கவலையே பட மாட்டார். அவர் எப்பொழுதும் அவராகவே இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : என் மருமகன் ஷாகினுக்கு இதை பாபர் செஞ்சிருக்க கூடாது.. மரியாதையே போயிடுச்சு – ஷாகித் அப்ரிடி விமர்சனம்

குல்தீப் யாதவ் இறுதியாக ரோகித் சர்மா பற்றி கூறும்பொழுது “வெளிப்படையாக எல்லா இளம் வீரர்களும் விரும்பக்கூடிய கேப்டன் ரோகித் சர்மா. இந்த ஒரு விஷயம் அவர் குறித்து முதன்மையானதாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Published by