சாம்சன் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.. அவர் கிரிக்கெட்டுக்கு நேற்று வரல – சாகல் அதிரடி கருத்து

0
5
Chahal

இந்திய டி20 அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சங் அழுத்தத்தை ஒரு காரணமாக தான் சரியாக விளையாடதற்கு கூற முடியாது என இந்திய வீரர் சாகல் கருத்து தெரிவித்திருக்கிறார்.

தற்போது சஞ்சு சாம்சன் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் நான்கு போட்டிகளில் பேட்டிங்கில் மிகவும் தடுமாறி வருகிறார். அவர் அடிப்படை பேட்டிங் தொழில்நுட்பத்தில் தவறுகள் செய்து ஆட்டம் இழப்பது கவலை தருகிறது.

- Advertisement -

காத்திருக்கும் கடைசி வாய்ப்பு

நாளை இந்த தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் சஞ்சு சாம்சன் இருக்கிறார். தற்போதைக்கு டி20 உலக கோப்பை பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது.

அவருடைய தலைமையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மூன்று வருடங்கள் விளையாடி உள்ள இந்திய சுழல் பந்துவீச்சாளர் சாகல் சஞ்சு சாம்சன் பேட்டிங் ஃபார்ம் குறித்து மிகவும் அதிரடியான கருத்தை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இதை ஏற்க முடியாது

இதுகுறித்து சாகல் கூறும் பொழுது “சஞ்சு சாம்சன் பல வருடங்களாக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரின் மிடில் ஆர்டரில் விளையாட ஆரம்பித்து இன்று அவர் ஒட்டுமொத்தமாக 12 வருடங்கள் கிரிக்கெட்டில் தாண்டி விட்டார். எனவே அழுத்தத்தை சாக்காக சொல்ல முடியாது. நான்கு போட்டியிலும் அவர் நிரூபிக்க தவறி இருக்கிறார். ஒரு போட்டி என்றால் பரவாயில்லை எனவே இதை ஏற்க முடியாது”

இதையும் படிங்க: 221 ரன்.. வெறித்தனம் காட்டிய வெஸ்ட் இண்டீஸ்.. குயின்டன் டி காக் தந்த திடீர் திருப்பம்.. 2வது டி20 முடிவுகள்

“தற்போது அவருடைய இடத்திற்கு இஷான் கிஷான் காத்துக் கொண்டிருப்பதை அவர் நன்கு அறிவார். மேலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என தன்னைத்தானே குற்றம் சொல்லிக் கொள்வார். எனவே அவர் தன்னை நிரூபித்தாக வேண்டிய இடத்தில் இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -