இந்திய அணியில் இஷான் கிஷான் தன்னுடைய இடத்திற்கு குறி வைக்கிறார் என்பதை கேமராவுக்கு முன்னால் தன்னால் ஒத்துக் கொள்ள முடியும் என சஞ்சு சாம்சன் கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய டி20 அணியில் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். மேலும் இருவரும் பிளேயிங் லெவனில் இடம்பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டி20 அணியில் டி20 உலக கோப்பைக்கு ஒரு தொடர் முன்னாள் இருக்கும் பொழுது இஷான் கிஷான் அதிரடியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் சஞ்சு சாம்சன் சரியாக விளையாடாததால் அவர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் ஒரே பிளேயிங் லெவனில் இடம் பெற்றார்கள். இருந்தாலும் விளையாடும் அணியில்இரண்டு விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றால் இருவருமே சரியாக விளையாட வேண்டும். ஒருவர் மோசமாக விளையாடினாலும் உடனடியாக நீக்கப்பட்டு ஒரு பேட்ஸ்மேன் கொண்டுவரப்பட்டு விடுவார்.
இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசும்போது “உண்மையைச் சொல்லப்போனால் யாரும் எதிர்பாராத விதமாக இஷான் கிஷான் இந்திய அணிக்குள் வந்தார். அவர் முஸ்தாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார். அந்தத் தொடரில் ஜார்க்கண்ட் அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பையையும் வென்றார்”
இதையும் படிங்க : 200 விக்கெட் எடுத்தவருக்கு பந்து வீச தெரியாதா.. ஒரு ஓவர் தரக்கூடாதா.. ஸ்ரேயாஸ் மோசமான கேப்டன்சி – முகமது கைஃப் விமர்சனம்
“நான் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறேன் என்பதை போல அவரும் கடினமாக உழைத்து வந்தார் என்று நான் உணர்ந்தேன். இரண்டு ஆண்டுகள் அணியில் இல்லாமல் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி திரும்ப வந்திருக்கிறார். மேலும் ரன் குவிக்கவும் தொடங்கி இருக்கிறார். அவர் என்னுடைய இடத்தை குறி வைக்கிறார் என கேமராவுக்கு முன்னால் என்னால் சொல்ல முடியும்” என்று கூறி இருக்கிறார்.