200 விக்கெட் எடுத்தவருக்கு பந்து வீச தெரியாதா.. ஒரு ஓவர் தரக்கூடாதா.. ஸ்ரேயாஸ் மோசமான கேப்டன்சி – முகமது கைஃப் விமர்சனம்

0
41
Kaif

நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி வசமாக இருந்ததாக முகமது கைஃப் வெளிப்படையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 210 ரன்கள் எடுத்து, எதிரணி பேட்டிங் செய்யும்போது பவர் பிளேவில் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி விட்டது. ஆனால் இந்த போட்டியில் சாகலுக்கு ஒரு ஓவர் கூட கொடுக்காமல் பஞ்சாப் தோல்வி அடைந்தது.

- Advertisement -

புரிந்து கொள்ள முடியவில்லை

இந்த நிலையில் ஆடுகளத்தில் மாறுபட்ட பவுன்ஸ் இருந்த காரணத்தினால், மேலும் பந்து நல்ல முறையில் சீம் ஆனதால் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தான் பந்து வீச வாய்ப்பு கொடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருந்தார்.

இதுகுறித்து முகமது கைப் பேசும்போது “நான் நேரடியாக ஒரு கேள்வியை கேட்கிறேன். நீங்கள் நேற்று ஐந்து பவுலர்களை மட்டுமே பயன்படுத்துவதாக முடிவு செய்தீர்கள். இதில் கடைசி கட்ட ஓவர்களை வீசிய யாஸ் தாக்கூர் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. இவருடன் இணைந்து பகுதி நேர பவுலர் ஸ்டோய்னிஸ் இறுதி ஓவர்களை வீசினார். ஆனால் உங்களுடைய முக்கிய பவுலர்கள் அர்ஸ்தீப், யான்சன் இறுதி கட்டத்திற்கு வராததை புரிந்து கொள்ளவே முடியவில்லை”

- Advertisement -

இது மோசமான முடிவு

“ஐபிஎல் தொடரில் மட்டும் சாகல் 200க்கும் மேற்பட்ட விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். ஆனால் நீங்கள் அவருக்கு நேற்று ஒரு ஓவர் கூட பந்து வீச கொடுக்கவில்லை. நீங்கள் இப்படிப்பட்ட ஒரு பவுலரை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் மோசமான கேப்டன்சிதான் செய்திருக்கிறீர்கள்”

இதையும் படிங்க : தொடர் 4 தோல்விகள்.. 30 ரன் எக்ஸ்ட்ரா எடுத்தும் தோத்துட்டோம்.. அதுக்கு முக்கிய காரணம் இதுதான் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

“மேலும் நீங்கள் 210 ரன்கள் எடுத்து எதிரணியை பவர் பிளேவில் மூன்று விக்கெட்டுகளை இழக்க வைத்தீர்கள். அப்படி என்றால் ஆட்டம் முழுமையாக உங்களது கைகளுக்கு வந்து விட்டது என்று அர்த்தம். நீங்கள் வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வி அடைந்ததற்கு காரணம் கேப்டன்சிதான்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -