நேற்று பேட்டிங் ஆர்டரில் கடைசியாக வைக்கப்பட்ட சஞ்சு சாம்சன் அணியில் தன்னுடைய ரோல் என்ன என்பது பற்றி மிகவும் வித்தியாசமான முறையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.
இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் சஞ்சு சாம்சன் எட்டாவது இடத்தில் பேட்டிங் ஆர்டரில் வைக்கப்பட்டார். அவருக்கு முன்பாக சிவம் துபே மற்றும் அக்சர் படேல் இருவரும் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார்கள். இறுதி வரை அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பே கொடுக்கப்படவில்லை.
மூன்று சதங்கள்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு சதங்கள் எனவும் மொத்தம் மூன்று சதங்கள் சஞ்சு சாம்சன் அடித்திருக்கிறார். இந்த மூன்று சதங்களும் அவருக்கு துவக்க ஆட்டக்காரராக விளையாடும் பொழுது கிடைத்தது. தற்போது கில் துவக்க ஆட்டக்காரராக இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
மேலும் ஐபிஎல் தொடரில் மூன்றாவது இடத்தில் விளையாடுகிறார். இந்த இடத்தில் இவருக்கு பல சாதனைகள் ஐபிஎல் தொடரில் இருக்கிறது. ஆனால் இந்திய அணியில் இவருக்கு மூன்றாவது இடமும் கொடுக்கப்படவில்லை. நேற்று இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் சஞ்சு சாம்சனுக்கு ஐந்தாவது இடத்தை கொடுக்க முடியும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜோக்கர் மற்றும் வில்லன்
இந்த நிலையில் இது குறித்து சஞ்சு சாம்சனிடம் கேள்வி எழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் “எளிதான கேள்விகள் எல்லாம் போதும். உங்களிடம் இறுதியாக ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்று சதங்கள் வைத்திருக்கிறீர்கள். அந்த மூன்றும் தொடக்க இடத்தில் வந்திருக்கிறது. நீங்கள் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் வசதியாக உணர்கிறீர்கள்” என்று கேட்டார்.
இதையும் படிங்க : நாங்க ஜெயிக்க 12 ஓவரே போதும்.. ஷிவம் துபேவை சும்மா எல்லாம் அனுப்பல.. இந்த பிளான் இருந்தது – சூரியகுமார் யாதவ் பேட்டி
இதற்கு பதில் அளித்த சஞ்சு சாம்சன் ” கேரளாவை சேர்ந்த சினிமா நடிகர் மோகன்லால் சமீபத்தில் மிகப்பெரிய தேசிய விருதை பெற்றார். அவர் 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறார். நான் பத்து ஆண்டுகளாக என் துறையில் இருக்கிறேன். அவர் ஹீரோவாக மட்டுமே நடிக்க முடியும் என்று சொல்ல முடியாது. அதேபோல நானும் தொடக்க இடத்தில் ஆடுவேன் என்று மட்டும் சொல்ல முடியாது. ஜோக்கராக வில்லனாக எல்லாம் கேரக்டரையும் செய்வதை வில்லனாக எல்லாம் கேரக்டரையும் செய்வதை போல நானும் பல இடங்களில் வரவேண்டும். தொடக்க வீரராக மட்டுமில்லை மூன்றாவது இடத்திலும் ரன் எடுத்திருக்கிறேன். தற்போது இந்த புதிய ரோலிலும் ரன் எடுக்க முயற்சி செய்வேன்” என்று கூறி இருக்கிறார்.






