நான் அப்படிங்கற ஆணவத்துல ஆடமாட்டேன்.. மும்பைக்கு என் மாஸ் பேட்டிங் பிளான் இதுதான் – சஞ்சு சாம்சன் பேட்டி

0
29
Sanju

நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி சதத்தால் சிஎஸ்கே அணி வென்றது. மேலும் அவரே ஆட்டநாயகன் விருதும் வென்றார்.

இந்த நிலையில் இந்த போட்டியில் தன்னுடைய பேட்டிங் திட்டத்தை எப்படி அமைத்துக் கொண்டேன்? மேலும் ஆடுகளும் எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்து மிக விரிவாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

ஆடுகளம் இப்படி இருந்தது

இது குறித்து சஞ்சு சாம்சன் பேசும்போது “நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தபோது இது வழக்கமான வான்கடே விக்கெட் இல்லை என்பது புரிந்தது. பந்து ஸ்விங் ஆனது. மேலும் கொஞ்சம் ஆடுகளத்தில் பந்து நின்றும் வந்தது. எனவே இதற்கு ஏற்ற வகையில் மாறிக்கொள்ள வேண்டி இருந்தது”

“மேலும் நாங்கள் எப்போதெல்லாம் அதிரடியாக விளையாட முயற்சி செய்தோமோ அப்பொழுதெல்லாம் ஒரு முனையில் விக்கெட் விழ ஆரம்பித்தது. எனவே யாராவது ஒரு பேட்ஸ்மேன் கடைசிவரையில் நின்று விளையாட வேண்டியது அவசியமானது. எனவே நான் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டேன்”

- Advertisement -

எப்படி வேண்டுமானாலும் ஆட மாட்டேன்

“இப்போது நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். அந்த நேரத்தில் என்ன தேவையோ அப்படி மட்டுமே விளையாடுகிறேன். நான் பேட்டிங் செய்ய வந்து இருக்கிறேன் நான் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம் என்று விளையாட மாட்டேன். இன்று விக்கெட் விழாமல் இருந்திருந்தால் நான் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடுகிறேன். சூழ்நிலை சரியாக இல்லாததால் கடைசி வரையில் நின்று விளையாடினேன்”

இதையும் படிங்க : 207 ரன்ஸ்.. மும்பை வரலாற்றை மாற்றிய சிஎஸ்கே.. வான்கடேவில் சரித்திர வெற்றி.. புள்ளி பட்டியலில் மாற்றம்

“நான் முதல் முறையாக மஞ்சள் ஜெர்சி அணிந்திருக்கிறேன். எனக்கு இது மிகவும் புதுமையான ஒரு அனுபவம். என் வாழ்க்கையில் இவ்வளவு மஞ்சள் ஜெர்சியை நான் பார்த்ததில்லை. இந்த அனிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது நான் மிகவும் பணிவோடு இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -