சஞ்சு சாம்சனுக்கு அநியாயம்.. கில்லுக்காக தேவையில்லாமல் அவரை நீக்கிட்டீங்க.. உத்தப்பா கருத்து

0
101

சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணி நிர்வாகம் அநியாயம் இழைத்துவிட்டதாக முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். சுப்மன் கில் இல்லாத நேரத்தில் டி20 தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடியும், இப்போது அவருக்கு இடம் மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அவர்  கூறியுள்ளார்.

2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய சஞ்சு சாம்சன், அபாரமாகப் பயன்படுத்தினார். கடந்த ஆண்டு தொடக்க வீரராக 8 டி20 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் உள்பட அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 2025 தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சொதப்பிய பிறகு, ஷுப்மன் கில் மீண்டும் டி20 தொடக்க வீரராக நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

அநியாயம் செய்யாதீர்கள்:

இது குறித்து பேசிய உத்தப்பா, “சூர்யா சொன்னார், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பே கில் தொடக்கம் இறங்கியிருந்தார் என்று. ஆனால் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்த பிறகு, அவர் அதை 3 சதங்களுடன் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். அபிஷேக் ஷர்மாவுக்கு அடுத்தபடியாக அதிக சராசரி சஞ்சுவுக்குத்தான்.”

” இப்போது அவருக்கு நாம்என்ன தவறு செய்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருப்பார். சஞ்சுவுடன் இந்தத் தொடர்பு இருக்கிறதா? ‘ஷுப்மனை சில போட்டிகள் முயற்சி செய்கிறோம், அது வேலை செய்யவில்லை என்றால் நீ திரும்ப வா’ என்று யாராவது சஞ்சுவிடம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

“அவர் தனக்கு வேலை செய்யும் பாணிக்கு நேர் எதிராக ஆடுகிறார். கில் என்பவர் சஞ்சு சாம்சன் அல்லது அபிஷேக் ஷர்மா போன்ற ஆக்ரோஷ தொடக்க வீரர் அல்ல. அவர் கொஞ்சம் நேரம் எடுத்து இறங்கி, செட்டான பிறகு அவுட்டாக்க முடியாத வீரர். முதல் 10 பந்துகளில் 11 ரன் அடிப்பார். பிறகு ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்துபவர். 15-18 பந்துகள் ஆடிய பிறகு ஷுப்மன் கில்லை அவுட்டாக்குவது கிட்டத்தட்ட இயலாத காரியம்.”

சாம்சனுக்கு துரோகம்:

“ஆனால் இப்போது அவர் தனது பலத்துக்கு எதிராக ஆடுகிறார் என்றார். உலகக் கோப்பைக்கு முன்பாக எது சிறப்பாக வேலை செய்கிறதோ அதையே தொடர வேண்டும். சஞ்சு-அபிஷேக் ஜோடி அபாரமாக வேலை செய்தது. ஒருவர் தோற்றாலும் மற்றவர் இழுத்துச் சென்றார். மிடில் ஆர்டருக்கு நன்றாக விளையாட வழி வகுத்தார்.”

இதையும் படிங்க: ஐபிஎல் 2026 ஏலத்தில் அதிக விலைக்கு செல்லக்கூடிய டாப் 5 வெளிநாட்டு வீரர்கள் யார்? ஆகாஷ் சோப்ரா கணிப்பு

“தென்னாப்பிரிக்காவில் திலக் வர்மா சதமடித்ததற்கு பின்னாலும் சஞ்சுவின் சதங்கள்தான் இருந்தன. அப்படி வேலை செய்த ஒரு ஜோடியை மாற்றியது ஷுப்மன் கில்லை உள்ளே கொண்டு வரத்தான். கில் அங்கு இருக்கத் தகுதியற்றவர் என்று சொல்ல வரவில்லை. ஆனால் அவர் சஞ்சு சாம்சன் அல்லது அபிஷேக் ஷர்மா போல ஆட முடியுமா? முற்றிலும் இல்லை என்றார்.

- Advertisement -