என் குணநலனோடு அப்படியே ஒத்துப் போகிற டீம்தான் சிஎஸ்கே.. இங்கு விளையாடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி – சஞ்சு சாம்சன் உருக்கம்

0
106

கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறி தற்போது சென்னை அணிக்கு விளையாடுவது குறித்து சஞ்சு சாம்சன் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் முதல் மூன்று போட்டிகளில் விரைவாக வெளியேறினாலும் இந்த போட்டியில் நிலைத்து நின்று 56 பந்துகளில் 15 போர் மற்றும் 4 சிக்ஸர் என 115 ரன்கள் குவித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவரது அதிரடி சிஎஸ்கே 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்தப் போட்டி முடிந்து பேசிய சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணியில் விளையாடுவது தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனவும், இங்குள்ள அணியின் சூழ்நிலை தன்னுடைய குண நலனுக்கு ஒத்துப் போவதாக சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “எனக்கு இது மாற்று அணி போல தோன்றவில்லை. இது இன்னொரு வீட்டிற்கு வந்தது போன்ற உணர்வை தான் கொடுக்கிறது. சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே மக்கள் மிகவும் அன்பானவர்கள், இனிமையானவர்கள். நாங்கள் மூன்று போட்டிகளில் தோற்று இருந்தாலும் கூட எங்களுக்கு ஆதரவு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். மேலும் நாங்கள் மூன்று போட்டிகளில் தோற்றாலும் கூட வெறும் 50 வினாடிகள் மட்டுமே ஆலோசனை நடத்தினோம்.

இது இந்த அணி எவ்வளவு நிதானமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. இது என் குணத்தோடு அப்படியே ஒத்துப் போகிறது அதனால் இந்த அணிக்கு நான் விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பேசி இருக்கிறார். கடந்த மூன்று போட்டிகளில் தோற்ற சிஎஸ்கே டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இரண்டாவது போட்டி நாளை கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -