ஐபிஎல் 2024

தோனியின் பிரம்மாண்ட சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்.. கோலி ரோகித்தால் கூட முடியாத ரெகார்ட்

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அதிக சிக்ஸர்களை அடித்ததன் மூலம் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

- Advertisement -

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெசர் மெக்கார்க் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

பேட்டிங்க்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். பின்னர் இந்த வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மிக விரைவிலயே ஆட்டம் இழந்து வெளியேறினாலும், அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது பொறுப்பை உணர்ந்து மிகச் சிறப்பாக விளையாடினார்.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இவர், இக்கட்டான சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத போது அவுட் ஆகி வெளியேற ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி தனது ஆறாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் எட்டு பவுண்டரிகள், ஆறு சிக்ஸர்கள் என 86 ரன்கள் குவித்துள்ளார். டெல்லி அணியின் கலீல் அகமது வீசிய மூன்றாவது ஓவரில் சிக்சர் அடித்த சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் அதிவேகமாக 200 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் இந்த சாதனையை தனது 159 ஆவது இன்னிங்ஸ் மூலம் படைத்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது 165 வது இன்னிங்ஸில் 200 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். தற்போது தோனியின் சாதனையை சஞ்சு சாம்சன் தனது குறைந்த இன்னிங்ஸ்கள் மூலம் முறியடித்து இருக்கிறார். இவர்களுக்கு அடுத்ததாக பெங்களூர் அணியின் விராட் கோலியும் (180 இன்னிங்ஸ்), ரோஹித் ஷர்மா (185 இன்னிங்ஸ்), சிஎஸ்கே முன்னால் வீரர் சுரேஷ் ரெய்னா (193 இன்னிங்ஸ்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதையும் படிங்க:ராஜஸ்தான் டீம்ல ரெண்டு பேர நல்லா தெரியும்.. அவங்களுக்காகவே இந்த ஸ்பெஷல் பிளான் பண்ணினோம் – ரிஷப் பண்ட் பேட்டி

சாம்சன் 46 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசியுள்ளார். ஐபிஎல்லில் 200 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த ஒன்பதாவது பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். முதல் இடத்தில் க்ரிஷ் கெயில் 359 சிக்சர்களுடன் இருக்கிறார். சாம்சன் 205 சிக்சர்களை விளாசியுள்ளார். டாப் 10இல் இருக்கிற ராஜஸ்தான் அணியின் ஒரே பேட்ஸ்மேன் இவர்தான்.

Published by