இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக யாரை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பேசியிருக்கிறார்.
தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில்லை கொண்டு வர முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. ஆனால் பெரும்பாலான இந்திய முன்னாள் வீரர்கள் வேறு வீரர்களை புதிய கேப்டனாக கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரை செய்து வருகிறார்கள்.
அனுபவ வீரர்கள்
தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் கேப்டன் பொறுப்பு வகிக்கக்கூடிய இடத்தில் அனுபவ வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் பும்ரா இருவரும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே அடுத்த இரண்டு வருடம் உடல் தகுதியுடன் இருந்தால் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இளம் வீரர்களாக கில் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் புதிய கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர்களாக தெரிகிறார்கள். இதில் ரிஷப் பண்ட் கேப்டன்சி பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நல்ல அபிப்ராயம் இல்லை என்று தெரிகிறது. மேலும் ஐபிஎல் தொடரில் அவருடைய தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் மிக மோசமாக இருந்து வருகிறது.
இவரிடம் விட்டு விடுங்கள்
இதுகுறித்து சஞ்சய் பாங்கர் பேசும் பொழுது “கேஎல்.ராகுல் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் நிரூபணமான ஒரு சிறந்த வீரர். அவரால் முழுமையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஒரு சைக்கிள் விளையாட முடியும். மேலும் அவர் எல்லா சூழ்நிலைகளிலும் சதம் அடித்திருக்கிறார். குறிப்பாக அவர் வெளிநாடுகளில் கடினமான இடங்களில் சதம் அடித்திருக்கிறார். அதே சமயத்தில் அவர் இளமையானவர் கிடையாது. அவருக்கு 32 வயதாகிறது. எனவே இதன் அடிப்படையில் பார்த்தால் அடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் ஒரு முழுமையான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளுக்கு கேப்டனாக இருக்க முடியும்”
இதையும் படிங்க : டிராவிட்கிட்ட கேட்டேன்.. கோலி சும்மா போகல.. அந்த 2 பேர்கிட்ட பொறுப்ப கொடுத்துட்டாரு.. – ஹர்ஷா போக்லே பேச்சு
“சூரியகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம், ஹர்திக் பாண்டியா காயம் அடையக்கூடிய வாய்ப்பில் இருந்தார் என்பதுதான். இந்த வகையில் தான் நம்மால் பும்ராவை அடுத்த டெஸ்ட் கேப்டனாக கொண்டுவர முடியாது. ஏனென்றால் அவர் காயமடைய கூடியவராக இருக்கிறார். அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.






