இந்திய கிரிக்கெட்

தோனி 3-4 பந்து மட்டுமே ஆடறது காமெடியான விஷயம்.. ஆனா அதுக்கும் அடிமைத்தன புகழ்ச்சி பேசினாங்க – மஞ்ச்ரேக்கர் கோபம்

நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்த தோனி வந்து விளையாடுவது குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக தோனி காயத்தினால் இரண்டு வாரங்கள் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அவருடைய காயம் எந்த அளவிற்கு குணமாகி உள்ளது என்பது குறித்து எந்த செய்தியும் இல்லை.

தோனி மீதான விமர்சனம்

உலக அளவில் ஐபிஎல் தொடர் என்பது மிகவும் போட்டித் தன்மை கொண்ட தரமான தொடர். எனவே ஐபிஎல் தொடரில் சிறந்த முறையில் விளையாடுவதற்கு போட்டி பயிற்சி அவசியம். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் மூலமாக நல்ல பார்மில் இருக்க வேண்டும்.

இந்த நிலையில் தோனி வருடத்தில் இரண்டு மாதங்கள் ஐபிஎல் தொடர் மட்டுமே விளையாடுகிறார். மற்ற பத்து மாதங்கள் கிரிக்கெட்டுடன் அவருக்கு எந்த தொடர்பும் இருப்பது கிடையாது. மேலும் அவருக்கு வயது 40 தாண்டி நிறைய ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அவர் ஓய்வு பெறாமல் இருப்பது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

- Advertisement -

அடிமைத்தன புகழ்ச்சி

இது குறித்து பேசி உள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் போது “இப்போது நீங்கள் தோனியை மைதானத்தில் விளையாட வைக்க வேண்டும். ஆனால் அதை எப்படி செய்வது? இப்போது பார்க்கும் போது அவர் தொடர்ந்து நல்ல செயல் திறன் காட்டுவது கடினம். அதனால் அவர் கீழ் வரிசையில் வந்து மூன்று நான்கு பந்துகளை மட்டுமே விளையாடியது பார்க்க சிரிப்பாக இருந்தது. ஆனால் அதையும் மீடியா புகழ்ந்து என்ன மாதிரியான ஒரு இன்னிங்ஸ் என்று சொன்னது”

இதையும் படிங்க : சூரியவன்சிய வேற மாதிரி பையன்.. அவன் பந்து வரதுக்கு முன்ன செய்ற ரெண்டு விஷயம் ஆச்சரியமானது – ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு

“மேலும் சிஎஸ்கே உரிமையாளர்கள் தோனி விளையாடுவாரா? தோனி கேப்டனாக தொடர்வாரா? என்பது போன்ற விஷயங்களை மிக மோசமாக கையாண்டார்கள். இங்கேதான் இந்திய கலாச்சாரத்தில் இருக்கும் அடிமைத்தனப் புகழ்ச்சி கிரிக்கெட்டிலும் ஊறி வந்திருப்பதை நீங்கள் பார்க்க முடியும். தோனிக்கு சாதாரண ரசிகர் ஆதரவு மட்டும் இல்லை. அதனைச் சுற்றி அளவுக்கதிகமான புகழ்ச்சி மனப்பான்மை உருவாகியுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by