விராட் கோலி இந்த மாதிரி இந்திய அணிக்கு வேண்டாம்.. 2 வருஷமா இதான் பிரச்சனை – மஞ்ச்ரேக்கர் பேட்டி

0
105
Virat

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விராட் கோலி மொத்தமாகச் சேர்த்து 62.50 ஸ்ட்ரைக் ரேட்டில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இந்த நிலையில் விராட் கோலி குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மிக முக்கிய கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

கடந்த மாதங்களில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலி 15 போட்டிகளில் 741 ரன்கள் குறித்து அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பையை கைப்பற்றி இருந்தார். மேலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு 155 என பெரிய அளவில் அதிகரித்து இருந்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு தேர்வான விராட் கோலியை துவக்க ஆட்டக்காரராக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அனுப்பி வருகிறது. மேலும் விராட் கோலியும் ஐபிஎல் தொடரில் பின்பற்றிய அதிரடியான அணுகுமுறையை டி20 உலகக்கோப்பைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார்.

தற்போது இந்திய அணி டி20 உலக கோப்பையின் முதல் சுற்றில் மூன்று போட்டிகளை நியூயார்க் மைதானத்தில் விளையாடுகிறது. இந்த மைதானம் எந்த பேட்ஸ்மேன்களுக்கும் பேட்டிங் செய்வதற்கு மிகக் கடுமையான ஆடுகளமாக இருக்கிறது. எனவே விராட் கோலி பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டி உள்ளது.

- Advertisement -

இதுகுறித்து பேசி இருக்கும் சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறும் பொழுது “விராட் கோலியின் பிரச்சனை என்னவென்றால் கடந்த இரண்டு வருடங்களாக அவருடைய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் பற்றி வெளியில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் அவர் அதை முற்றிலும் மாற்றி விட்டார். மற்றவர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு செல்லும் பொழுது இவர் தன்னை 150 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு உயர்த்திக் கொண்டார். எனவே ஐபிஎல் தொடரில் விளையாடிய அதே அதிரடியான அணுகுமுறையில் அவர் இங்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இங்கு ஆடுகளங்களை பார்க்கும் பொழுது பழைய விராட் கோலிதான் சரியாக இருப்பார்.

இதையும் படிங்க: இந்திய அணியில் இணைந்ததும்.. ஹர்திக் பாண்டியா பார்முக்கு வந்தது இப்படிதான் – பவுலிங் கோச் வெளியிட்ட தகவல்

எனவே விராட் கோலி பழைய முறையில் பேட்டிங்கில் அவருடைய பாணியில் திரும்ப வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும் ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக தட்டையாகக் கிடைக்கும் பொழுது, விராட் கோலி தன்னுடைய பேட்டிங்கையும் அதிரடியாக மாற்றிக் கொள்ளலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -