இந்திய கிரிக்கெட்

எல்லாம் விராட் கோலியின் பிடிவாதம்.. பேட்டிங் பயிற்சியாளர் என்ன செஞ்சுட்டு இருக்கீங்க? – மஞ்ச்ரேக்கர் கேள்வி

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மீண்டும் ஆப் ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்தை விளையாடி ஆட்டம் இழந்தது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்பொழுது பிரிஸ்பேன் காபா மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.இந்த போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சில் பும்ராவை தவிர மற்ற அனைவரும் மோசமாகவே செயல்பட்டு இருந்தார்கள். ஆஸ்திரேலியா அணிக்கு ஹெட் 152 ரன்கள் எடுக்க அந்த அணி மொத்தம் 475 ரன்கள் குவித்தது.

விராட் கோலியின் தீராத பிரச்சனை

இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறப்பாக விளையாட வேண்டிய தேவை இருந்தது. மேலும் விராட் கோலி ஆப் ஸ்டெம்ப்க்கு வெளியே செல்லும் பந்தில் தொடர்ந்து ஆட்டம் இழந்து வந்தது விமர்சனங்களை உருவாக்கி இருந்தது.

இந்த நிலையில் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பயிற்சியில் ஆப் ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை விட்டு பயிற்சி செய்து வந்த தகவல்கள் விளையாடின. இதன் காரணமாக விராட் கோலி நின்று விளையாடி பெரிய ரன்களை எடுப்பார் என இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் நம்பிக்கை உருவாகியது. ஆனால் இந்த போட்டியிலும் 16 பந்தில் மூன்று ரன்கள் எடுத்து ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்தை விளையாடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெறுப்பேற்றி இருக்கிறார்.

- Advertisement -

பேட்டிங் பயிற்சியாளர் யார்?

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “இந்திய அணியில் பேட்டிங் பயிற்சியாளர் பங்கை ஆராய வேண்டிய நேரம் வந்துவிட்டது? சில பேட்டர்கள் தொடர்ந்து ஒரே முறையில் ஆட்டம் இழந்து வருகிறார்கள். இந்த பிரச்சனை ஏன் இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதையும் படிங்க : 4 ஓவர் 4 விக்கெட்.. மெகதி ஹாசன் அபார பந்துவீச்சு.. ரோமன் போவல் அதிரடி ஆட்டம் வீண்.. வங்கதேச அணி திரில் வெற்றி

அவருடைய இந்த ட்வீட்டில் கருத்திட்டுள்ள இந்திய ரசிகர்கள் “சாதாரண முறை மற்றும் பிடிவாதம் தான் ஒரு வீரர் இப்படியே தொடர்ந்து ஆட்டம் இழப்பதற்கு காரணமாக இருக்க முடியும். விராட் கோலி தன் தவறுகளை திருத்திக் கொள்ள முன்வருவது போலவே தெரியவில்லை. இல்லையென்றால் அவரை அணியை விட்டு நீக்குவது தவிர வழியில்லை” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -
Published by