சஞ்சு சாம்சன் பெரிய ரிஸ்க் எடுக்கிறார்.. இதுக்காகவே கம்பீர் இதை செய்யணும் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வேண்டுகோள்

0
28
Sanju

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இறந்து போதிலும் அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என காரணங்களை விளக்கி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியிருக்கிறார்.

இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியில் இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் ரன்கள் எடுக்காமல் சிரமப்பட்டு வரும் சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் இருவரும் மீண்டும் பார்முக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சஞ்சு சாம்சன் தொழில்நுட்ப சிக்கல்

தற்போது இந்த தொடரில் நடைபெற்ற முடிந்திருக்கும் நான்கு போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் வேகப்பந்து வீச்சில் ஷார்ட் பந்தில் தொடர்ந்து ஆட்டம் இழந்து வருகிறார். அதே சமயத்தில் அவருக்கு இவ்வகையான பந்தில் எந்தவித பலவீனமும் ஏற்கனவே இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து ஏழு போட்டிகளில் இந்திய டி20 அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று முன்பு வாக்குறுதி தந்திருந்தார். இதன் காரணமாக அவர் கிரீசில் உள்ளே சென்றும், லெக் ஸ்டெம்பில் என்று விளையாடவும் தொழில்நுட்ப ரீதியாக மாற்றங்களை செய்திருந்தார். இதன் காரணமாக தற்பொழுது அவர் ஷார்ட் பந்தை விளையாடுவதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு கொடுங்கள்

இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது ” நீங்கள் ஒரு டி20 திறமையை பார்க்கும் பொழுது, அவர்களால் போட்டியில் என்ன மாதிரியான பங்களிப்பை கொடுக்க முடியும் மேலும் அவர்களால் என்ன மாதிரியான தாக்கத்தை செலுத்த முடியும் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடும் பொழுது சதம் அடித்து அணியின் வெற்றியை சுலபமாக்கும் அளவுக்கு தாக்கத்தை செலுத்தக் கூடியவராக இருக்கிறார்”

இதையும் படிங்க : விராட் கோலி vs ருதுராஜ் புள்ளி விவரம்.. 23 டி20 போட்டிக்கு பிறகு யார் அதிக ரன்கள் அடித்தது.. ஒரு சிறப்பு பார்வை

“எனவே இந்த மாதிரி வீரர்கள் சில நேரங்களில் ரன்கள் எடுக்க முடியாமல் இருந்தாலும் அவர்களுடைய தோல்வியை அனுமதிக்க வேண்டும். ஏனெனில் டி20 கிரிக்கெட்டின் இயல்பு இதுதான். நீங்கள் தொடர்ந்து சீராக இங்கு இருக்க முடியாது. நீங்கள் அபாயங்களை தொடர்ந்து எடுக்க வேண்டும். மீண்டும் சஞ்சு சாம்சன் பார்முக்கு திரும்பவும் இப்படி அபாயமான முறையில்தான் விளையாட வேண்டும். எனவே அவருக்கு நாம் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -