தோனி பிளேயர் கிடையாது பிராண்டுதான்.. ஆனா இதையாவது செய்யணும் இல்லனா வேஸ்ட் – மஞ்ச்ரேக்கர் கருத்து

0
125
Dhoni

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி ஒரு வீரராக இல்லாமல் ஒரு பிராண்டாக மட்டுமே இருக்கிறார் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை அனுப்பிவிட்டு பேட்டிங் வரிசையில் மகேந்திர சிங் தோனி ஒன்பதாவது இடத்தில் வந்தது சிஎஸ்கே ரசிகர்களையே கடுமையாக எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு தோனி மீதான விமர்சனங்கள் வெளிவர ஆரம்பித்து இருக்கின்றன.

- Advertisement -

பெரிய சிக்கலில் சிஎஸ்கே

தற்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பஞ்சாப் என நிறைய அணிகளில் அன் கேப்டு இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இந்தியா எங்கும் நடைபெறும் டி20 லீக்குகளை பின் தொடர்ந்து ஒவ்வொரு அணியின் திறமை கண்டறியும் குழுவும் இளம் வீரர்களை பிடித்து வருகிறது. இதன் மூலம் ஏலத்தில் மிகக் குறைந்த தொகைக்கு அவர்களை வாங்கி பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கிறது.

இதன் காரணமாக பெரிய வீரர்களுக்கு பெரிய தொகையை கொடுத்து வாங்க ஏலத்தில் இந்த அணிகளுக்கு வசதியாக அமைகிறது. ஆனால் சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் எந்த இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதில்லை. மேலும் வாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு ஏலத்திலிருந்து எந்த இளம் வீரரையும் வாங்கியும் வைப்பதில்லை. இதன் காரணமாக தோனி மற்றும் ஸ்டீபன் பிளமிங் மீது சிஎஸ்கே ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

தோனி ஒரு பிராண்டுதான்

இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது “நான் இப்பொழுது பெரிய படத்தை பார்க்கிறேன். இந்த ஆண்டு மற்றும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனியை பார்க்கும் பொழுது அவர் ஒரு வீரராக இல்லாமல் பிராண்டாக இருக்கிறார். சிஎஸ்கே ஒரு பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்கும் பொழுது ஒரு எக்ஸ்ட்ரா பேட்டரை தேர்ந்தெடுப்பதில்லை. ஏனென்றால் அந்த இடத்திற்கு தோனி இருக்கிறார். தற்போது அவர் வித்தியாசமான ரோலில் வருகிறார்”

இதையும் படிங்க : 17 வருடங்கள் காத்திருந்து.. டெல்லி செய்த தரமான சம்பவம்.. ஹைதராபாத்துக்கு நடந்த சோகம்

“இதனால்தான் இவ்வளவு தாமதமாக பேட்டிங் செய்ய வரும் மகேந்திர சிங் தோனி குறைந்தபட்சம் கேப்டனாகவாவது அணியை வழிநடத்த வேண்டும். ஒரு விக்கெட் கீப்பராகவும், ஒரு கேப்டனாகவும் இருக்கும் பொழுது அவரால் அணிக்கு கூடுதல் பங்களிப்பை கொடுக்க முடியும். எனவே அவர் இதை செய்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -