இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்ற வரும் நிலையில் சிறப்பாக விளையாடிய பும்ரா இந்த போட்டியில் மொத்தமாக ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் பும்ரா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் பும்ரா இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட நிலையில் இந்திய அணி இவரது சிறப்பான கேப்டன்ஷிப் மூலமாக வெற்றி பெற்றது. இருப்பினும் ரோஹித் சர்மா திரும்பவும் இந்திய அணிக்கு திரும்பிய பின்னர் இரண்டாவது போட்டியில் தோல்வியும், மூன்றாவது போட்டியில் டிராவும் செய்துள்ளது.
இந்த மூன்று போட்டிகளிலும் பும்ரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணிக்கு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் மொத்தமாக ஒன்பது விக்கெட்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 44 போட்டிகளில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றி அபார சாதனை படைத்திருக்கும் நிலையில் பும்ரா ஒரு ஜீனியஸ் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் புகழ்ந்து பேசி இருக்கிறார்.
பும்ராவின் சாதனை நம்ப முடியாதது
இது குறித்த அவர் கூறும் பொழுது “இந்த மனிதரிடம் எந்த ஒரு பலவீனமும் இருப்பதாக தெரியவில்லை. இந்திய கிரிக்கெட் கொண்டு வந்திருக்கும் ஒரு அற்புதமான பரிசாக பும்ரா இருக்கிறார். ஒரு ஜீனியஸ் வீரரை போன்று பும்ரா இருக்கும் நிலையில் அவரைப் போன்ற நீங்கள் தொடர்ந்து முயற்சித்தால் நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும். டி20 உலக கோப்பையாக இருந்தாலும் சரி, 50 ஓவர் உலகக்கோப்பையாக இருந்தாலும் சரி எந்த நிலையிலும் பும்ரா அணிக்குத் தேவையானதை நிச்சயமாக வழங்குவார். இதுபோல ஒரு போட்டியாக இருந்தாலும் பல பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட் பெற போராடும் நிலையில் பும்ரா இதனையும் சிறப்பாக கையாண்டு வருகிறார்.
இதையும் படிங்க:2008ல் சேவாக் செஞ்சது ஞாபகம் இருக்கா ரோஹித்.. இந்திய அணி ஜெயிக்க இந்த பிளான் பண்ணுங்க – கவாஸ்கர் பேட்டி
அவர் ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் கேரியை அவுட் ஆக்கினார். அலெக்ஸ் கேரி கடைசி வரிசையில் களமிறங்கும் போது பும்ரா அந்த ஸ்பெல்லில் இரண்டு பந்துகளுக்கு மேல் வீசப்போவதில்லை என்றிருக்கும் நிலையில் அவரையும் அவுட் ஆக்கி வெளியேற்றியது மிகச் சிறப்பான தருணம். நீங்கள் அவரது சராசரியைப் பார்க்கும் போது உண்மையிலேயே அது நம்ப முடியாத வகையில் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






