ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் கில்லை வெளியில் வைத்து நிதீஷ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவரை தேர்வு செய்தது தவறானது என தற்பொழுதும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் டிரா செய்வதற்கான வாய்ப்பில் இருந்து கடைசியில் பேட்டிங்கில் சொதப்பி ஆஸ்திரேலியா அணியிடம் 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரிலும் பின்னிலையை சந்தித்திருக்கிறது.
இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நிதீஷ் குமாரை நீக்கிவிட்டு ஒரு பந்துவீச்சாளரை அணியில் சேர்த்த வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருந்தார். அதே சமயத்தில் நிதீஷ் குமார் சதம் அடித்து அசத்தினார். இதனால் மஞ்ச்ரேக்கர் மீது விமர்சனங்கள் ரசிகர்களால் பெரிய அளவில் முன் வைக்கப்பட்டது.
இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “நீங்கள் பேட்டிங்கில் இருக்கும் பிரச்சனையை சரி செய்வதற்காக பேட்டிங் செய்யக்கூடிய ஒரு பந்துவீச்சாளரை அணியில் வைக்க நினைத்தீர்கள். இதற்காக கில்லை நீக்கிவிட்டு நிதீஷ் குமாரை வைத்துக் கொண்டீர்கள். ஆனால் ஐந்து நாட்களும் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்த தட்டையான ஆடுகளத்தில், கில் ஒரு பேட்ஸ்மேன் ஆக மிகவும் சிறப்பானவராக இருந்திருப்பார்”
“கடைசியாக நிதீஷ் குமார் பேட்டிங்கில் நன்றாக விளையாடிவிட்டார். ஆனால் கில் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் சரியான ஒரு பேட்ஸ்மேன் ஆக நிச்சயம் இருக்கவே முடியாது. டாப் ஆர்டர் கில் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு விட முடியாது”
இதையும் படிங்க : என்னுடைய ட்வீட் ரோகித் சர்மாவை விமர்சிக்கல.. இந்த வீரருக்காகவே போட்டேன் – அஸ்வின் தந்த விளக்கம்
“இந்திய அணியில் பும்ராவுக்கும் மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சிராஜ் நல்ல பந்துவீச்சாளர் என்றாலும் அவர் அருகில் வர முடியாது. மேலும் ஆஸ்திரேலியா அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் நமக்குமே நிறைய வித்தியாசம் இருக்கிறது. அத்துடன் நாதன் லயன் அளவுக்கு இந்தியாவில் சுழல் பந்துவீச்சாளர் யாரும் இல்லை. இந்திய அணி பந்துவீச்சில் பெரிய அளவில் பும்ராவை தவிர்த்து ஆஸ்திரேலியா அணியிடம் பின்தங்கி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.