தற்போது இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா குறிப்பிட்ட விஷயத்தில் பெரிய தொந்தரவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நேரடியாக கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் துவக்க இடத்திற்கு திரும்பிய ரோஹித் சர்மா ஐந்து பந்தில் மூன்று ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து மீண்டும் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார். இந்திய அணியும் இன்று திடீரென பெரிய சரிவை சந்தித்து மோசமான கட்டத்தில் இருக்கிறது.
ரோஹித் சர்மா கொடுத்த வாக்குறுதி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை தனிப்பட்ட காரணங்களால் ரோஹித் சர்மா தவற விட்டார். இந்த நிலையில் அந்த டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து மிகச் சிறப்பாக விளையாடிய கேஎல்ராகுல் அரைசதம் அடித்ததுடன், மட்டுமில்லாமல் 200 ரன் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார்.
இந்த நிலையில் இரண்டாவது போட்டிக்கு திரும்பிய கேப்டன் ரோஹித் சர்மா கேஎல்.ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றும், வெளிநாட்டு சூழ்நிலையில் ராகுல் செயல்படும் விதம் சிறப்பாக இருப்பதால், தொடர்ந்து அவரை துவக்க வீரராக களமிறக்க இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குறுதியை காப்பாற்றாத ரோஹித் சர்மா
இது குறித்து பேசி இருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நீங்கள் அங்கு சிறப்பாக விளையாடும் பொழுது மதிக்கப்படுவீர்கள். கேஎல்.ராகுல் இதில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பை பெற்றார். ஆனால் ரோகித் சர்மா மீண்டும் பார்மை பெற வேண்டும் என்கின்ற காரணத்திற்காக, கேஎல்.ராகுல் விரும்பிய இடத்தில் இருந்து அவரை வெளியேற்றி இருப்பது தவறான சிந்தனையாக அமைந்திருக்கிறது”
இதையும் படிங்க : 6 ரன் 3 விக்கெட்.. மீண்டும் கம்பீர் மோசமான முடிவு.. ஜெய்ஸ்வால் அவுட் காரணம் யார்? – 4வது டெஸ்ட்
“துவக்க ஜோடியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என ஆரம்பத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். ஆனால் தொடர் தொடர்ந்து நடக்கும் பொழுது திரும்ப வந்து அந்த ஜோடியை தற்பொழுது ரோஹித் சர்மா தொந்தரவு செய்து இருக்கிறார். ஆனால் அவர் அந்த இடத்தில் சரியாகவும் செயல்படவில்லை” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






