பைனலில் கோலியை காப்பாற்றியது இவங்கதான்.. அவர் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியற்றவர் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேட்டி

0
134
Virat

நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதுக்கு தகுதி இல்லாதவர் என விமர்சனம் செய்திருக்கிறார்.

விராட் கோலி குறிப்பிட்ட இறுதிப் போட்டியின் முதல் ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து அதிரடியாக ஆரம்பித்தார். இதற்கு அடுத்து இந்திய அணி பவர் பிளேவில் முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதன் காரணமாக விராட் கோலி மெதுவாக ஆட வேண்டிய தேவை இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் அவர் அக்சர் படேலை ஆடவிட்டு ஆங்கர் ரோலில் விளையாடினார். இதன் காரணமாக 48 பந்துகளில் அவர் அரை சதம் அடித்தார். அதற்குப் பிறகு அங்கிருந்து 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்திய அணி ஒரு வழியாக 176 ரன்கள் சேர்த்தது.

பின்பு இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட் கைவசம் இருக்க 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற நிலையில் மிகவும் வசதியாக இருந்தது. இதற்குப் பிறகு பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஸ்தீப் சிங் மூவரும் அபாரமான பந்துவீச்சின் மூலமாக இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்கள்.

- Advertisement -

இது குறித்து பேசி இருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “விராட் கோலி அவ்வளவு மெதுவான ஒரு இன்னிங்ஸ் விளையாடியதன் மூலமாக, இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா விளையாடுவதற்கு இரண்டு பந்துகள் மட்டுமே கிடைத்தது. ஒரு பக்கம் இந்தியாவின் பேட்டிங் இதனால் நன்றாக இருந்தது என்று நினைத்தேன். ஆனால் அந்த போட்டியில் இந்தியாவை இறுக்கமான இடத்தில் விராட் கோலி மெதுவாக விளையாடி வைத்து விட்டார். கடைசி ஐந்து ஓவர்களுக்கு முன்பாக முக்கிய பந்துவீச்சாளர்கள் வருவதற்கு முன்னால் இது நிரூபிக்கப்பட்டது.

இதையும் படிங்க : 603 ரன் ஃபாலோ-ஆன்.. பல உலகச்சாதனை படைத்த போட்டி.. தெ.ஆ-வை சுருட்டி இந்திய அணி வரலாற்று வெற்றி

இந்தியா உறுதியாக தோற்கும் நிலையில் இருந்தது. தென் ஆப்பிரிக்கா 90 சதவீதத்துக்கு மேல் வெற்றி வாய்ப்பில் இருந்தது. ஆனால் அடுத்து வந்த இந்திய பந்துவீச்சாளர்கள்தான் விராட் கோலியை காப்பாற்றினார்கள். இந்த போட்டியில் ஒரு பந்துவீச்சாளர்தான் ஆட்டநாயகனாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் கையை விட்டுப் போன ஒரு போட்டியை திரும்ப இந்தியா பக்கம் எடுத்து வந்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -