அகர்கர் செஞ்சது முட்டாள்தனமானது.. கில் விஷயம் 10 வருஷமா நடக்குது.. இன்னும் திருந்தல – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

0
42
Agarkar

இந்திய டி20 அணிக்கு சுப்மன் கில்லை தேர்வு செய்து ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யாமல் விட்டது லாஜிக் இல்லாதது என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையான முறையில் தேர்வுக் குழுவை விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆசியக் கோப்பை இந்திய அணியில் கில் சேர்க்கப்பட்டதோடு அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டதும், அவரைவிட இந்த வடிவத்தில் அதிரடியாக விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் சேர்க்கப்படாததும் பெரிய விமர்சனமாக மாறி வருகிறது.

- Advertisement -

லாஜிக்கே கிடையாது

இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது ” சமீபத்தில் கிடையாது 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் தொடர்ந்து பார்த்து வருவது என்னவென்றால், ஒரு வீரர் ஒரு வடிவத்தில் சிறப்பாக செயல்பட்டால் அவரை எல்லா வடிவத்திற்கும் கொண்டு வருகிறார்கள். கில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு டி20 அணியில் வாய்ப்பு தருகிறார்கள். இதில் எந்த லாஜிக்கும் கிடையாது”

“ஸ்ரேயாஸ் ஐயர் உள்நாட்டு கிரிக்கெட் சரியாக விளையாடவில்லை என்று கூறி நீக்கினார்கள் இது நியாயமானது. இந்த தண்டனை அவரை மிகச் சிறப்பாக மாற்றியது. மேலும் உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெள்ளைப் பந்து தொடரில் கிடைத்த வாய்ப்பில் அவர் வேறு மாதிரி விளையாடினார். ஐபிஎல் தொடரிலும் அதை எடுத்து வந்தார். அது இதுவரையில் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக இருந்தது”

- Advertisement -

இது எந்த வகையில் நியாயம்

“நீங்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய வீரருக்கு அதே வடிவத்தில் இந்திய அணியில் வாய்ப்பு தரவில்லை. அதே சமயத்தில் வேறு ஒரு வடிவத்தில் நன்றாக விளையாடிய ஒரு வீரருக்கு இன்னொரு வடிவத்தில் வாய்ப்பைத் தருகிறீர்கள். இது எந்த வகையில் நியாயமானது?”

இதையும் படிங்க : ஸ்ரேயாசை சேர்க்காத உண்மை விரைவில் வெளியே வரும்.. மோதலுக்கான காரணம் இதுதான் – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

“நீங்கள் டி20 அணிக்கு ஒரு வீரரை தேர்ந்தெடுப்பதாக இருந்தால், அவர் டி20 வடிவத்தில் சிறப்பாக செயல்பட்டவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வீரரை நீங்கள் தேர்ந்தெடுப்பதுதான் லாஜிக் மற்றும் நியாயமானது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட ஒருவருக்கு வெகுமதியாக டி20 வடிவத்தில் வாய்ப்பு கிடைக்கிறது. அதுவும் ஸ்ரேயாஸ் ஐயர் மாதிரி ஒரு வீரரை இழந்து கிடைக்கிறது. இது தவறானது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -